2 1/2 வருடமா கர்ப்பம்... ஒரு வழியா குழந்தை பொறந்தாச்சு... சன் டிவி சீரியல் லக லக!
Netizantions troll Suntv’s chandralekha serial Tamil News:
இரண்டரை ஆண்டுகளாக கர்ப்பமாகவே இருக்கும் சந்திரா - லேகாவுக்கு தற்போது தான் சீமந்தம் மற்றும் வளைகாப்பு நிகழ்வு நடந்துள்ளன நிலையில், குழந்தை எப்போது தான் பிறக்கும் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
Netizantions troll Suntv’s chandralekha serial Tamil News:
இரண்டரை ஆண்டுகளாக கர்ப்பமாகவே இருக்கும் சந்திரா - லேகாவுக்கு தற்போது தான் சீமந்தம் மற்றும் வளைகாப்பு நிகழ்வு நடந்துள்ளன நிலையில், குழந்தை எப்போது தான் பிறக்கும் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
chandralekha serial Tamil News: சின்னத்திரை சீரியல்கள் என்றாலே வருடக் கணக்கில் ஒளிபரப்பாக கூடியவை. அதிலும் சன் டிவி-யில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பற்றி சொல்லவே தேவையில்லை. 1500 எபிசோடுகள், 2000 எபிசோடுகள் என கின்னஸ் சாதனை படைப்பார்கள். அந்த வகையில் சன் டிவி-யில் தினமும் பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா சீரியல் பல சாதனைகளை செய்து வருகிறது.
Advertisment
கடந்த 2014 அக்டோபர் முதல் தற்போது வரை வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் இந்த சீரியல், தமிழ் சீரியல்களில் மிக நீண்ட காலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது. மேலும், பல சுவாரஷ்ய சம்பங்களுடனும் திருப்பங்களுடனும் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருந்து வருகிறது.
சந்திரலேகா சீரியலில் தற்போது சீமந்தம் மற்றும் வளைகாப்பு சம்மந்தப்பட்ட காட்சிகள் பரபரப்பாக ஒளிபரபரப்பாகி வருகின்றன. இந்த சீரியலுக்கான சமீபத்திய ப்ரோமோவில் சந்திரா மற்றும் லேகாவின் சீமந்தம் நல்லபடியாக நடக்குமா? சஞ்சய் மற்றும் சபரி உயிருடன் திரும்புவர்களாக? என சந்தேகிக்கும் வகையில் கடத்தல் காட்சிகள் இருக்கின்றன.
இப்படி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் சந்திரலேகா சீரியலில் சுரஷ்யமான விஷயம் நடந்துள்ளது. இதைப் பார்த்த பார்வையாளர்கள் அதை கண்டும் காணாமலும் இருக்கின்றனர். ஆனால் நமது நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா. அதை தோண்டித் துருவி வருகிறார்கள்.
Advertisment
Advertisements
அது என்னதான் விஷயம் என்றால், சந்திரலேகா சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களாக வரும் சந்திரா - லேகா இருவரும் கர்ப்பமாகி கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால், இந்த இரண்டரை ஆண்டுகளாக 10 மாதத்திற்குண்டான கதையை தான் சன்டிவி ஒளிபரப்பு செய்துள்ளதா? என நெட்டிசன்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
மேலும், இரண்டரை ஆண்டுகளாக கர்ப்பமாகவே இருக்கும் சந்திரா - லேகாவுக்கு தற்போது தான் சீமந்தம் மற்றும் வளைகாப்பு காட்சிகள் வந்துள்ளன. எனேவ குழந்தை எப்போது தான் பிறக்கும் என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
இதற்கிடையில் சந்திரா - லேகாவுக்கு குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான காட்சிகள் அடுத்தடுத்த வாரங்களில் ஒளிபரப்பாகும் என்றும் தெரிகிறது.