Advertisment

சந்திரமுகி 2 படத்திற்கு இவ்ளோ வசூலா? அதிர்ச்சியில் படக்குழுவினர்

ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடிப்பில் உருவான சந்திரமுகி 2 திரைப்படம் செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகி ரூ. 7.2 கோடி வசூலைக் குவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
சந்திரமுகி 2

சந்திரமுகி 2

ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடிப்பில் உருவான சந்திரமுகி 2 திரைப்படம் செப்டம்பர் 28-ம் தேதி வெளியாகி ரூ. 7.2 கோடி வசூலைக் குவித்துள்ளது.

Advertisment

ரஜினி, ஜோதிகா நடிப்பில் சந்திரமுகி திரைப்படம் 2005 வெளியானது. வசூல் ரீதியாக இத்திரைப்படம் சாதனை படைத்தது. மேலும் நடிகை ஜோதிகாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

சந்திரமுகி 2 திரைப்படம் பெரும் எதிர்பார்க்கு மத்தியில்  வெளியானது. தமிழக திரையரங்கில் 51.90 % பேர் படத்தை பார்த்தனர். தெலுங்கு மாநிலத்தில்  42.65 % பேர் படத்தினை பார்த்தனர். வட இந்தியாவில் 12.77 % மட்டுமே படத்தை பார்த்துள்ளனர்.

கங்கனா ரனாவத் நடிப்பில் 2022ம் ஆண்டு வெளியான ’தாகட்’ படத்திற்கு பிறகு சந்திரமுகி 2 திரையரங்கில் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கங்கனா ரனாவத் இதற்கு முன்பாக நடித்த தலைவி, பங்கா, படங்கள் எதிர்பார்த்த வசூலை குவிக்கவில்லை.

இந்நிலையில் சந்திரமுகி 2 படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில்  நடிகை கங்கனா ரனாவத் சமீபத்தில் கொடுத்த பேட்டியில், “படத்தில் நான்தான்  நிஜ சந்திரமுகி. சந்திரமுகி யார் மற்றும் அவள் எப்படி பேயாக மாறினால் என்பதுதான் கதை. பொதுவாக நாம் கமர்ஷியல் திரைப்படங்களில் நடிப்பதில்லை. பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பேன். இந்த முறை புதிதாக முயற்சித்துள்ளேன். பாடல் மற்றும் நடனம் இடம்பெறும் படத்தில் நடிப்பது நன்றாக உள்ளது. படத்தின் கிளைமேக்ஸ் உங்களை பிரமிக்க வைக்கும்” என்று கூறினார்.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment