ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றிப்படமாக அமைந்த சந்திரமுகி படத்தில் பொம்மி கேரக்டரில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை பிரகர்ஷிதா தற்போது திருமணம் முடிந்து தனது குழந்தையுடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான படம் சந்திரமுகி. 90-களின் இறுதியில் மலையாளத்தில் மோகன்லால் சுரேஷ்கோபி நடிப்பில் வெளியான மணிச்சித்திரதாஷ் என்ற படத்தின் தழுவலாக எடுக்கப்பட்ட இந்த படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேலு. வினித் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
பெரிய வசூல் சாதனை படைத்த இந்த படத்தில் இடம்பெற்ற அத்திந்தோம் என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலில் ரஜினியுடன் சேர்ந்து பொம்மி என்ற குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர். நடிகை பிரகர்ஷிதா.
ஏற்கனவே வேலன், ராஜராஜேஸ்வரி உள்ளிட்ட சில சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த இவர், வளர்ந்து, ஒரு சில படங்களில் நடித்து வந்தார். இதனிடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு, ஸ்ரீனிவாசன் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிரபர்ஷிதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.
இதனிடையே தற்போது, அவர் தனது குடும்பம் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை தன இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில், சந்திரமுகி பொம்மி இப்போது மம்மி ஆகிவிட்டாரா என்று ஆச்சிரியத்துடன் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில். வசூல் சாதனை நிகழ்த்திய சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது, பிரமாண்டமாக தயாராகி வருகிறது. ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் வடிவேலு, நடிகை ராதிகா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“