/tamil-ie/media/media_files/uploads/2017/11/nachiyar.jpg)
பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் நாச்சியார் திரைப்படத்தின் டீசர்தான் இப்போதைக்கு டாக் ஆஃப் த டவுன். அத்திரைப்படத்தின் டீஸர் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. அதில், ஜோதிகா பேசியிருக்கும் ஒற்றை சொல்லால் விவாதம் கிளம்பியுள்ளது.
அந்த ஒற்றை வார்த்தை படத்தின் விளம்பரத்துக்காகவே டீஸரில் இணைக்கப்பட்டிருப்பதாகவே பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சிம்பு பாடிய ‘பீப்’ பாடலுக்கு எதிராக போராடிய மாதர் சங்கத்தினர், ஏன் இந்த வசனத்திற்கு எதிராக கேள்வி எழுப்பவில்லை என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கு பதில் தரும் விதமாக, ஜனநாயக மாதர் சங்க துணைத்தலைவர் வாசுகி தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ” யதார்த்தம் என்கிற பேரில் இதை ஏற்க முடியாது. குறைந்தபட்சம் முழு படத்தை பார்க்கும் போதாவது எந்த பின்புலத்தில் காட்சி அமைகிறது என்று புரிந்து கொள்ள முடியும். டீசரில் இணைக்க வேண்டிய அவசியம் என்ன? ஜோதிகாவை சொல்ல வைத்து shock ஏற்படுத்தி விளம்பரம் தேடும் ஏற்பாடு தவிர வேறென்ன? யதார்த்தத்தை காட்டுவது மட்டுமல்ல, மாற்றுவதும் சினிமாவின் நோக்கமாக இருக்க வேண்டும்.”, என குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.