கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக நிகழ்ச்சி ஏற்பாட்டாராள ஏ.சி.டி.சி ஈவென்ட்ஸ் நிறுவன அதிகாரி, மற்றும் 2 நபர்கள் மீது, டிக்கெட்டுகளை அதிகமாக விற்றது, நம்பிக்கையை மீறியது மற்றும் மக்களுக்கு இடையூறு செய்தது உள்ளிட்ட பிரிவுகள் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சியை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) உள்ள ஒரு தனியார் இடத்தில் நடத்தினார். கடந்த செப்டம்பர் 10-ந் தேதி நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் அதிகமாக விற்கப்படுவதாக பலர் புகார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, தாம்பரம் நகர போலீஸார் விசாரணை நடத்தி, ஏசிடிசி ஈவென்ட்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஹேமந்த் ராஜா மற்றும் இருவர் மீது ஐபிசி பிரிவு 406 (நம்பிக்கை மீறலுக்கான தண்டனை) மற்றும் 188 (முறையாக அறிவிக்கப்பட்ட உத்தரவை மீறுதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.
இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் அரங்கில் இருக்கை எண்ணிக்கையை மீறி அமைப்பாளர்கள் டிக்கெட் விற்பனை செய்தது தெரியவந்தது. இதன் மூலம் அவர்கள் மீது மோசடி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது இது குறித்து தாம்பரம் நகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கூறுகையில், எதிர்பார்த்ததை விட 15,000 பேர் அந்த இடத்தில் குவிந்தனர். கூட்டம் "எதிர்பார்த்ததை விட அதிகமாக" இருந்தது; 25,000 நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன, ஆனால் நிகழ்ச்சிக்கு 35,000 முதல் 40,000 பேர் வந்திருந்தனர்.
இதனால் ஈ.சிஆர். சாலையில், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சரியான நேரத்தில் இடத்திற்குச் செல்ல முடியாததால் பலர் சமூக ஊடகங்களில் தங்கள் அவலநிலையைப் கடுமையான விமர்சனங்களை கொடுத்தனர். மேலும் பலர் நிகழ்ச்சியில் நடந்த குழப்பம் மற்றும் டிக்கெட்டுகளுக்காக பெரும் தொகையை செலவழித்தாலும் பலருக்கும் நிகழ்ச்சியின் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்..
ஏ.ஆர்.ரஹ்மான் தனது கச்சேரியின் போது மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளுக்கும்" தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார், மேலும் ஹேமந்த் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார், இதனிடையே நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக சமூகவலைதளங்களில் ஏ.ஆர் ரஹ்மான் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஆனாலும் செப்டம்பர் 10ம் தேதி. கச்சேரியை தவறவிட்டவர்களுக்கு டிக்கெட்டுக்கான கட்டணம் திருப்பித் தரப்படும் உறுதியளித்த ரஹ்மான் மக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.