நாம கல்யாணம் பண்ணிக்குவோம்! – த்ரிஷாவிடம் ‘ஓகே’ வாங்கிய நடிகை!

த்ரிஷா மீதுள்ள அன்பின் மிகுதியாலேயே, சார்மி இவ்வாறு கூறியுள்ளதாக, த்ரிஷாவின் ஃபாலோவர்கள் கூறியுள்ளனர்.

Trisha Charmee

நடிகை த்ரிஷாவை, திருமணம் செய்ய தான் தயாராக இருப்பதாகவும், இந்தியாவில் இது சட்டப்படி தவறு இல்லை என்பதால், அவருக்கு இதன்மூலம் அழைப்பு விடுப்பதாக நடிகை சார்மி, ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நடிகை த்ரிஷா, நேற்று ( மே 4), தனது 36வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்தன. அந்தவகையில் நடிகை சார்மி, ட்விட்டரில் த்ரிஷாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில், த்ரிஷா தன்னை கட்டிப்பிடித்து முத்தமிடும் புகைப்படத்தை பதிவிட்டிருக்கும் அவர், பேபி எப்போதும் உன்னை விரும்புகிறேன். என் காதலை நீ ஏற்பாய் என்று காதலனைப் போல் காத்திருக்கிறேன். திருமணம் செய்து கொள்ளலாம். இப்போது அது சட்டப்பூர்வமாகவும் அனுமதிக்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

இது, த்ரிஷா மீதுள்ள அன்பின் மிகுதியாலேயே, சார்மி இவ்வாறு கூறியுள்ளதாக, த்ரிஷாவின் ஃபாலோவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கு பதிலளித்திருக்கும் த்ரிஷா, ”நன்றி, நான் ஏற்கனவே எஸ் சொல்லி விட்டேனே” என்று தெரிவித்திருக்கிறார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Charmme kaur to trisha tamil cinema

Next Story
Paramapatham Vilaiyattu Trailer: மருத்துவமனையில் தமிழக அரசியல்வாதி, பிரச்னையில் த்ரிஷா!Trishan Controversial message on Rana
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com