கொரோனா வைரஸ் குறித்த சர்ச்சை வீடியோ - இந்த ரணகளத்திலும் குதூகலம் தேவையா சார்மி?..

Charmee Kaur tiktok video about Corona virus : ஆல் தி பெஸ்ட் கைய்ஸ், கொரோனா இங்கேயும் வந்துருச்சு என்று டிக்டாக்கில் நடிகை சார்மி...

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஆல் தி பெஸ்ட் கைய்ஸ், கொரோனா இங்கேயும் வந்துருச்சு என்று டிக்டாக்கில் நடிகை சார்மி வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிங்காரச் சென்னை வரலாறு 1 : இது தங்கசாலை தெரு உருவான கதை…

சிம்பு நடிப்பில் உருவான காதல் அழிவதில்லை படத்தின் மூலம், தமிழில் அறிமுகமானவர் நடிகை சார்மி கவுர். பின்னர் சில படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் படத்தயாரிப்பாளராகவும் உள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு, சீனாவில் துவங்கி, , தற்போது சர்வதேச அளவில் பல நாடுகளிலும் பெரும் பலி ஏற்படுத்தியுள்ள நிலையில், உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. இதன்காரணமாக,பல நாடுகளில் பொருளாதாரம் கடுமையாக சரிவடைந்துள்ளது. இந்தியாவிலும், பெங்களூரு, மற்றும் ஐதராபாத் நகரங்களில் இருவருக்கு கெரோனா வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்ட நிலையில், தற்போது 28 பேருக்கு பாதிப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த ரணகளத்தில், நடிகை சார்மி டிக்டாக்கில் வெளியிட்டுள்ள வீடியோ பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதில், “கொரோனா வைரஸ் டெல்லிக்கும், தெலுங்கானாவுக்கும் வந்து விட்டதாக அறிந்தேன் நண்பர்களே. வாழ்த்துகள்” என்று சந்தோஷப்படுவதுபோல் பேசி இருந்தார். இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பலரும் பகிர்ந்து சார்மிக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close