/tamil-ie/media/media_files/uploads/2020/05/New-Project-2020-05-19T233117.478.jpg)
actress chaya singh, chaya singh dance again for manmatha rasa song, thiruda thirudi movie, viral video, மன்மத ராசா, திருடா திருடி, சாயா சிங், Thiruda Thirudi, shiva shankar master, manmatha rasa, Dhanush, dance, Chaya Singh, chaya singh instagram
நடிகை சாயா சிங் ரசிகர்களுக்கு தனது பிறந்தநாள் விருந்தாக, திருடா திருடி படத்தின் மன்மத ராசா பாடலுக்கு மீண்டும் டான்ஸ் ஆடிய வீடியோ வெளியிட்டு ட்ரீட் கொடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.

இயக்குனர் சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் நடிகர் தனுஷ் - சாயா சிங் நடித்து 2003-ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படம் திருடா திருடி. இந்த திரைப்படம் வெற்றி பெறுவதற்கு காரணம் அதில் இடம்பெற்ற ‘மன்மதராசா மன்மதராசா’என்ற பாடல்தான். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் தினா இசையமைத்திருந்தார். மன்மத ராசா பாடல் அன்றைக்கு இளைஞர்களை மின்சாரம் பாய்ந்தது போல ஆடவைத்தது. அந்தப் பாடல் வெளியாகி 17 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் கடந்த இரண்டு தசாப்தங்களில் வெளியான ஒரு 20 ஃபாஸ்ட் பீட் டான்ஸ் பாடல்களை பட்டியலிட்டால் நிச்சயமாக அதில் மன்மத ராசா பாடலும் இருக்கும்.
மன்மத ராசா பாடல் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் அதனுடைய இசை மட்டுமல்ல, அந்த பாடலுக்கு தனுஷும் சாயாசிங்கும் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல ஆடிய செம டான்ஸ் மிகப்பெரிய காரணம். தனுஷ் இன்றைக்கும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். ஆனால், சாயாசிங்குக்கு அதற்குப் பிறகு பெரிய அளவில் சினிமா வாய்ப்பு இல்லாததால் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். பின்னர், சீரியல்களில் நடித்து வந்தார்.
சாயாசிங் 2012-ம் ஆண்டு டிவி சீரியல் நடிகர் கிருஷ்ணாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து, சாயா சிங் சீரியல்களில் நடித்து வருகிறார்.
மன்மத ராசா பாடல் வெளியாகி 17 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அந்தப் பாட்டுக்கு டான்ஸ் ஆடிய சாயா சிங் சிவசங்கர் டான்ஸ் மாஸ்டர் உடன் இணைந்து நடனம் ஆடியுள்ளார்.
சாயா சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த வீடியோவில், “உங்கள் அனைவருக்கும் எனது பிறந்த நாள் விருந்தா, உங்களுக்கு பிடித்தமான திருடா திருடி படத்தின் பாடல்...ஒரு வருடம் முன்பு நான் சிவசங்கர் மாஸ்டரை சந்தித்தேன், அப்போது என்னால் சரியாக ஆட முடியவில்லை. ஆனால், அந்த தருணத்தை புதுப்பிக்க முடியவில்லை” என்று குறிபிட்டுள்ளார்.
சாயா சிங் ரசிகர்களுக்கு தனது பிறந்தநாள் விருந்தாக, அவர்களின் ஃபேவரைட் மன்மதvராசா பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.