ஹிர்த்திக் ரோஷன் மீது சென்னையில் வழக்கு பதிவு... செண்ட் விளம்பரத்தில் நடித்து ஏமாற்றினாரா?

ஹிர்த்திக் ரோஷன் மீது சென்னையில் மோசடி வழக்கு

பாலிவுட்  நடிகர் ஹிர்த்திக் ரோஷன் மீது சென்னையில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செண்ட் விளம்பரத்தில் ஹிர்த்திக் ரோஷன் :

பாலிவுட் நடிகர் ஹிர்த்திக் ரோஷனுக்கு இந்தியில் மடுட்மில்லாமல் தமிழிலும் ரசிகர்கள் எராளம். குறிப்பாக அவரின் நடனத்தை பின்பற்றி பல்வேறு இந்தியில் பல தனியார் நடன நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னையில் உள்ள கொடூங்கையூரில் ஹிர்த்திக் ரோஷன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹிர்த்திக் ரோஷன் வாசனை திரவியம் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கினார். தானே அந்த வாசனை திரவியத்தின் விளம்பர தூதராக இருந்து நாடு முழுவதும் முகவர்கள் மூலம் விற்பனையை தொடங்கினார்.

ஹிர்த்திக் ரோஷன் நடிக்கும் விளம்பரம் என்பதால் பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் வாசனை திரவியத்தை வாங்க தொடங்கினார். இந்நிலையில் சென்னையில் இயங்கி வரும் சன் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் தமிழகத்தில் ஹிர்த்திக் ரோஷனின் வாசனை திரவியத்தை வாங்கி விற்கும் முகவராக ஒப்பந்தமாகினர். ஒப்பந்த அடிப்படையில் நடிகர் ஹிர்த்திக் ரோஷனின் நிறுவனத்தில் இருந்து சுமார் இருபது லட்சத்திற்கான வாசனை திரவியத்தை வாங்கியுள்ளனர்.

ஹிர்த்திக் ரோஷன்

ஹிர்த்திக் ரோஷன் நடித்த செண்ட் விளம்பரம்

 

இதனிடையே வாசனை திரவிய நிறுவனத்தை வேறொரு நபருக்கு கைமாற்றி விட்ட ஹிர்த்திக் ரோஷன் விளம்பர தூதர் பொறுப்பில் இருந்தும் விலகினார். அவர் விலகியதால் சந்தையில் வாசனை திரவியம் விற்பனை மந்தம் அடைந்ததாகவும், ஹிர்த்திக் ரோஷன் விளம்பர தூதர் என்ற அடிப்படையில் தான் ஒப்பந்தம் போட்டு மோசடியில் ஈடுபட்டதாக சன் எண்டர்பிரைசஸ் நிறுவன உரிமையாளர் முரளிதரன் சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 20 லட்சம் மதிப்புடைய வாசனை திரவியங்கள் விற்பனையாகாமல் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாக அவர் கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் முடிவில் ஹிர்த்திக் ரோஷன் உள்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டதன் அடிப்படையில் கொடுங்கையூர் போலீசார் மோசடி பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close