குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வி.ஜே.பிரியங்கா – மணிமேகலை இடையே ஏற்பட்டுள்ள மோதல், சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முன்னாள் நடுவர் வெங்கடேஷ் பட் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினயாக சின்னத்திரையில் அறிமுகமாக வி.ஜே.மணிமேலை, சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், குடும்பத்தின் எதிர்ப்பை மீறி, தனது காதலர் ஹூசைன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் சின்னத்திரையில் இருந்து விலகிய அவர், ஒரு பெரிய இடைவெளிக்கு பிறகு, விஜய் டிவியில் தொகுப்பாளினியாக களமிறங்கினார்.
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கிய இவர், தற்போது ரக்ஷனுடன் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் அவ்வப்போது வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக வெளியிட்ட அறிவிப்பு சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே மணிமேகலை வெளியேறியது குறித்து நெட்டிசன்கள் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் நிலையில், விஜய் டிவி பிரபலங்கள் பலரும் பிரியங்காவுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் பிரியங்கா வந்ததில் இருந்து, விஜய் டிவியில் இருந்து வெளியேறிய பெண் தொகுப்பாளினிகள் குறித்த பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். இதனால் யார் மீது தவறு இருக்கிறது என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நடுவர் வெங்கடேஷ் பட், மணிமேகலை, பிரியங்கா இருவரும் நம் வீட்டில் இருக்கும் பெண்கள் சண்டை போடுவது போல் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இருவருமே கஷ்டப்பட்டுதான் இந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள். மணிமேகலை வீட்டை விட்டு வெளியேறி பல தடைகளை கடந்து சமூகவலைதளங்களில் இவ்வளர் அழகாக மாறியிருக்கிறார். பிரியங்காவும் தனது தனித்திறமையின் மூலம் அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இவர்களுக்கு இடையில் இருப்பது சின்ன பிரச்னைதான். ஆனால் இதை பெரிதாக்கி சமூகலைதளங்களில் பலர் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அதிலும் பிரியங்கா பற்றியும் மணிமேகலை பற்றியும், அவர்களின் சொந்த வாழ்க்கை பற்றியும் சில தாத்தாக்கள் அருகில் இருந்து பார்த்ததுபோல் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த மாதிரி ஆட்களை செருப்பால் அடிக்கவேண்டும். சமூகவலைதளங்களில் கட்டுகோப்புகள் இல்லாததால் கண்டமேனிக்கு பேசி வருகிறார்கள் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“