/tamil-ie/media/media_files/uploads/2018/09/Chekka-Chivantha-Vaanam.jpg)
Chekka Chivantha Vaanam, செக்கச்சிவந்த வானம்
நான்கு கதாநாயகர்களை மையமாகக் கொண்டு மணிரத்தினம் இயக்கிய செக்கச்சிவந்த வானம் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
செக்கச்சிவந்த வானம் ரிலீஸ் தேதி :
காற்று வெளியிடை படத்தை அடுத்து இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் செக்கச் சிவந்த வானம். இந்தப் படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய், டயானா இரப்பா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
மணிரத்தினம் ரசிகர்கள் கொண்டாடும் செக்கச் சிவந்த வானம்
மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்களை கடந்த 5-ம் தேதி படக்குழுவினர் வெளியிட்டனர்.
September 2018#ChekkaChivanthaVaanam releasing worldwide on the 27th of September@LycaProductions@MadrasTalkies_@thearvindswami@arunvijayno1@aishu_dil@aditiraohydari@arrahman@onlynikilpic.twitter.com/NdY9jOl4l4
— VijaySethupathi (@VijaySethuOffl)
#ChekkaChivanthaVaanam releasing worldwide on the 27th of September@LycaProductions@MadrasTalkies_@thearvindswami@arunvijayno1@aishu_dil@aditiraohydari@arrahman@onlynikilpic.twitter.com/NdY9jOl4l4
— VijaySethupathi (@VijaySethuOffl) September 10, 2018
அதற்கு முன்னதாகவே செப்டம்பர் 28-ம் தேதி படம் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதில் ஒரு நாளைக்கு முன்னதாகவே செப்டம்பர் 27-ம் தேதி அன்றே செக்கச்சிவந்த வானம் திரைக்கு வரும் என்ற அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.