செக்க சிவந்த வானம் ரிலீஸ்: மணிரத்னம், சிம்புவுக்கு குஷ்பூ பாராட்டு

செக்கச் சிவந்த வானம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

செக்கச் சிவந்த வானம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chekka Chivantha Vaanam

Chekka Chivantha Vaanam

Chekka Chivantha Vaanam : மணிரத்தினம் இயக்கத்தில் பிரபல நான்கு முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் செக்க சிவந்த வானம் படம் இன்று ரிலீஸ் ஆனது. உலகம் முழுவதும் இந்தப் படத்திற்கு ஆரவார வரவேற்பு கிடைத்திருக்கிறது. விமர்சகர்கள் நேர்மறையான கருத்துகளை கூறி வருகின்றனர்.

Advertisment

நான்கு கதாநாயகர்களை மையமாகக் கொண்டு மணிரத்தினம் இயக்கிய செக்கச்சிவந்த வானம் படம் இன்று (செப்டம்பர் 27) உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படத்தில் சிம்பு, அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி, டயானா எரப்பா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

Chekka Chivantha Vaanam LIVE UPDATES : செக்க சிவந்த வானம் படம் ரிலீஸ் லைவ் அப்டேட்ஸ்:

2.19 AM : வயதான பிரகாஷ் ராஜ்-க்கு பிறகு, அவர் வாரிசுகளில் யார் அடுத்த டான் என்பதற்கான சண்டையில் இறங்குகிறார்கள் நான்கு கதாநாயகர்கள். இப்படத்தில் சிம்பு மற்றும் விஜய் சேதுபதியே பக்கா மாஸ் காட்டியிருப்பதாக பிரபலங்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கூறி வருகின்றனர்.

Advertisment
Advertisements

12:25 AM: நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மணிரத்னம் ஏன் சிறந்தவர் என்பதை இந்தப் படத்தில் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். அதேபோல எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் சென்றிருக்கும் இன்னொரு நபர், சிம்பு. மிகச்சிறந்த நடிகர்கள் வரிசையில் அவர் ராஜாவாக நிற்கிறார்’ என புகழ்ந்து தள்ளியிருக்கிறார் குஷ்பூ.

11:10 AM: பட நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஜாம்பவானான மணிரத்னம் சாருடன் பணியாற்றியது மிகுந்த பெருமைக்குரியது. இந்தப் படத்தை தியேட்டரில் மட்டும் பாருங்கள்!’ என குறிப்பிட்டிருக்கிறார்.

10:55 AM: விஜய் சேதுபதி நடிப்பில் பிரமாதப்படுத்தியிருப்பதாகவும், சிம்பு தனது ரசிகர்களை மட்டுமின்றி பொது ஆடியன்ஸையும் கவர்கிற விதமாக நடித்திருப்பதாகவும் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

10:40 AM: செக்கச் சிவந்த வானம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த சுப கீர்த்தனா, ‘அருமை! நான் மணிரத்னத்தை விரும்புவதால் இதை கூறவில்லை. படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அருண் விஜய் ஆகியோர் நடித்திருக்கும் காட்சிகள் அடிப்படையில் கூறுகிறேன். நிச்சயம் படம் நல்ல வசூலைத் தரும்’ என கூறியிருக்கிறார்.

10:30 AM: செக்கச் சிவந்த வானம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நடிகர் சித்தார்த், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் படத்தை புகழ்ந்து தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்கள்.

 

Maniratnam Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: