இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான், இயக்குநர் மணிரத்தினம் மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து கூட்டணியில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் உங்கள் மனதை புரட்டிப் போட வெளியானது செக்கச் சிவந்த வானம் பாடல்கள்.
செக்கச் சிவந்த வானம் பாடல்கள் :
மணிரத்தினம் இயக்கத்தில், ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் இரண்டு பாடல்கள் இன்று மாலை வெளியாகும் என்று சோனி நிறுவனம் அறிவித்தது.
மணிரத்தினம் ரசிகர்கள் கொண்டாடும் செக்கச்சிவந்த வானம் டிரெய்லர் குறித்த செய்திக்கு
அதன் அடிப்படையில், சிம்பு மற்றும் அவர் காதலிக்கான பாடல் ‘மழைக் குருவி’ வெளியிடப்பட்டுள்ளது.
September 2018
இதனை தொடர்ந்து, ஜோதிகா - அரவிந்த் சாமி ஜோடிக்காக இசையமைக்கப்பட்ட ‘பூமி பூமி’ பாடலும் வெளியாகியுள்ளது.
September 2018
இந்த பாடல்களை கேட்க நினைப்பவர்கள், சோனி மியூசிக் இணையத்தளம் அல்லது gaana.com தளத்தில் கேட்கலாம். இந்த படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று முகநூல் மூலம் வெளியிடப்பட்டது.