scorecardresearch

செக்க சிவந்த வானம் : விஜய் சேதுபதி, சிம்பு இணைந்து நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு

விஜய் சேதுபதி, சிம்பு இணைந்து நடிக்கும் மணிரத்தினம் இயக்கும் படத்தின் தலைப்பு செக்க சிவந்த மண் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

checkka chivandha vanam
checkka chivandha vanam

விஜய் சேதுபதி, சிம்பு இணைந்து நடிக்கும் மணிரத்தினம் இயக்கும் படத்தின் தலைப்பு செக்க சிவந்த மண் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

முதன் முதலாக விஜய் சேதுபதி, சிம்பு இணைந்து நடிக்கும் படத்தை மணிரத்தினம் இயக்குகிறார். இந்த படத்தில், ஃபகத் பாசில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா, அரவிந்த் சாமி, அருண் விஜய், அதிதி ராவ் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்துகான தலைப்பு இதுவரையில் அறிவிக்கப்படாமல் இருந்தது. படத்தை மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி போலீசாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அருண் விஜய் மற்றும் அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் சில நாட்களுக்கு முன்பே ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதனால், கதையில் மாறுதல் செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மணிரத்னம் இயக்கும் இந்தப் படத்தின் டைட்டில் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த சூழலில் இன்று அதிகாரப்பூர்வமாக டைட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்திற்கு ‘செக்கச் சிவந்த வானம்’ என டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது.

செக்கச் சிவந்த வானம்’ என டைட்டில் அறிவிக்கப்பட்டதும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. செம ஸ்டைலிஷாக படம் எடுத்தாலும் டைட்டிலை மட்டும் நல்ல தமிழில் வைத்துவிடுகிறார் மணிரத்னம் என ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.
thearvindswami, STR, arunvijayno1, VijaySethupathi, santoshsivan, arrahman, sreekarprasad, vairamuthu

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Chekka chivantha vaanam vijay sethupathi and chipu will be part of the films title announcement