வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் மரணம்: பெருமாள் பிச்சையாக மிரட்டியவர்

வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ், தனது 83வது வயதில், உடல்நலக் குறைவால் காலமானார்.

வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ், தனது 83வது வயதில், உடல்நலக் குறைவால் காலமானார்.

author-image
WebDesk
New Update
kotta srinivasa rao

புகைப்படம்: ட்விட்டர்

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் தனது நடிப்பால் தனி ரசிகர்களையே வைத்துள்ள மூத்த நடிகர் கோட்டா சீனிவாச ராவ், தனது 83வது வயதில் இன்று காலமானார். நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக திரையுலகில் கோலோச்சிய கோட்டா சீனிவாச ராவ், 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்குத் திரையுலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் தனது அழுத்தமான நடிப்பால் முத்திரை பதித்தவர். 

அவரது குரல் வளம் மற்றும் உடல் மொழி, கதாபாத்திரங்களுக்கு ஒரு தனித்துவமான பரிமாணத்தை அளித்தன. பிரணம் கரெடி (1978) என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் தனது கலைப் பயணத்தைத் தொடங்கிய அவர், பத்மஸ்ரீ விருது, ஒன்பது நந்தி விருதுகள் உள்ளிட்ட பல உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

தமிழில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் வெளியான சாமி திரைப்படத்தில் பெருமாள் பிச்சை என்ற கதாபாத்திரத்தில் நடித்து, தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தார். அவரது மறைவு, இந்திய திரையுலகிற்கு ஒரு பேரிழப்பாகும். திரை பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

Advertisment
Advertisements

கோட்டா சீனிவாச ராவ் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்குத் திரையுலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் அவர் ஒரு முக்கிய இடத்தை பிடித்தவர். கோட்டா சீனிவாச ராவ், தெலுங்குத் திரையுலகில் ஒரு ஜாம்பவானாக இருந்தாலும், தமிழிலும் பல படங்களில் நடித்து, தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ளார்.

சாமி, திருப்பாச்சி, குத்து, சகுனி, கோ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவை தவிர, இன்னும் பல தமிழ் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், வில்லன் வேடங்களிலும் கோட்டா சீனிவாச ராவ் நடித்துள்ளார். அவரது தனித்துவமான வசன உச்சரிப்பு மற்றும் உடல் மொழி தமிழ் சினிமாவுக்கும் ஒரு தனி சிறப்பை அளித்தன.

கோட்டா சீனிவாச ராவ் 1999 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையில் விஜயவாடா கிழக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக (MLA) பணியாற்றினார்.

2023 ஆம் ஆண்டில், அவர் காலமானதாக வதந்திகள் பரவின. அப்போது அவர் ஒரு வீடியோ வெளியிட்டு, தான் நலமாக இருப்பதாகவும், இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் வயதுமூப்பு காரணமாக இன்று காலை உயிரிழந்தார். 

Tamil Cinema Death

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: