கட்டுமான ஒப்பந்ததாரர் பிரச்சனையில், தந்தை மகனை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில், நடிகர் பாபி சிம்ஹாக்கு சென்னை ஆலந்தூர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நடிகர் பாபி சிம்ஹா கொடைக்கானலில், பேத்துறை என்ற பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வரும் நிலையில், வீடு கட்டும் பணி மற்றும் ஒப்பந்தம் குறித்து ஜமீர், காசிம் முகமது ஆகியோரிடம் பாபி சிம்ஹா ஒப்படைத்துள்ளார். ஆனால் நிர்ணையிக்கப்பட்ட தொகையை விட குறைவான தொகைக்கு வீடு கட்டியதாக பாபி சிம்ஹா – ஒப்பந்தரார்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதல் காரணமாக ஒப்பந்ததாரர்கள் வீட்டை பாதியிலேயே விட்டுச்சென்றுள்ள நிலையில், இது குறித்து பாபி சிம்ஹா தன்னிடம் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டுவதாகவும், இவர்களுக்கு ஆதரவாக உசேன், மகேந்திரன் ஆகியோர் செயல்படுவதாக கொடைக்கானல் நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில், பாபி சிம்ஹா பொய்யான புகார் தெரிவிப்பதாக உசேன் கூறியிருந்தார்.
இதனிடையே கொடைக்கானலில், தன்னைப்பற்றி பாபி சிம்ஹா அவதூறாக பேசியதாவும், தன்னை மிரட்டியதாகவும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளான எனக்கு ரூ1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கூறி உசேன் சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இது குறித்து பாபி சிம்ஹா பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 2-ந் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
பாபி சிம்ஹா கொடைக்கானலில் வீடு கட்டுவது குறித்து பல சிக்கல்கள் எழுந்து வரும நிலையில், தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாபி சிம்ஹா மீது புகார் அளித்த உசேன், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஆரூணின் சகோதரர் என்பது குறிப்பிடத்த்ககது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“