/tamil-ie/media/media_files/uploads/2022/08/featured-2-1.jpg)
நுங்கம்பாக்கத்தில் உள்ள கியர்ஸ் அண்ட் கேரேஜ் என்ற இடத்தில், தேசிய விருது பெற்ற சூரரைப் போற்று திரைப்படம் ஒளிபரப்பப்படவுள்ளது.
Chennai Tamil News: சென்னை தினத்தையொட்டி மக்களின் பொழுதுபோக்கிற்காக கொண்டுவரப்படும் நிகழ்ச்சிகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
திரைப்படம் ஒளிபரப்புவது முதல் விளையாட்டு மையம் வரை பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் சென்னையில் இந்த வாரம் ஒருங்கிணைக்கப்படுகிறது. மெட்ராஸ் தினத்தை கொண்ட இந்த வாரத்தை கொண்டாடும் வகையில் பல நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது.
நுங்கம்பாக்கத்தில் உள்ள கியர்ஸ் அண்ட் கேரேஜ் என்ற இடத்தில், தேசிய விருது பெற்ற சூரரைப் போற்று திரைப்படத்தை மக்களுக்காக ஒளிபரப்பவுள்ளனர். சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி நடித்துள்ள இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் பாராட்டை பெற்றது. ஆகஸ்ட் 25 அன்று இரவு 9 மணிக்கு இந்த வார கிளப் மூவி நைட்டில் மக்கள் கண்டு மகிழலாம்.
சென்னையில் மக்கள் பொழுதுபோக்கிற்காக செல்லும் பிரபலமான இடமாக போர்டு ரூம் கஃபே காணப்படுகிறது. இந்த வாரம், 'காமெடி அட் தி போர்டு ரூம்' என்ற நிகழ்ச்சி ஆகஸ்ட் 26 அன்று நடைபெறவுள்ளது. இதில் பிரவேஷிகா, பாரதி, சக்தி, பிரதிமா மற்றும் நடாஷா ஆகியோர் பங்குகொள்ளவுள்ளனர். இந்த நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு நடைபெற இருக்கிறது.
சென்னையில் உள்ள ஃபீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் இரவுச் சந்தை மற்றும் உணவுத் திருவிழா ஆகியவை நடைபெறவுள்ளது. 'SteppinOut Food Festival & Night Market' என்ற தலைப்பில் நிகழவிருக்கும் இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் 27 முதல் மாலை 4 மணி முதல் இரண்டு நாட்களுக்கு நடக்கும். 40க்கும் மேற்பட்ட ஸ்டால்களில் உணவு மற்றும் பலதரப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு திருவிழாவைப்போல நடைபெறவுள்ளது.
மெட்ராஸ் வாரத்தை முன்னிட்டு, 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான 'புகைப்பட நடை' திட்டமிடப்பட்டுள்ளது. 'சென்னை டெய்லி போட்டோ'வில் இருந்து என்.ராமசாமி தலைமையில், ஆகஸ்ட் 27ம் தேதி மாலை 3.30 மணி முதல் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த ஆண்டு மெட்ராஸ் வார புகைப்பட நடை பாண்டி பஜாரில் நடைபெறும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.