நடிகை த்ரிஷா மீது ஒரு கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்த மன்சூர் அலிகானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பதிலடி கொடுத்துள்ள நிலையில், இந்த வழக்கில், த்ரிஷா குஷ்பு மற்றும் சிரஞ்சீவி பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
லியோ படத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து நடித்திருந்த மன்சூர் அலிகான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், த்ரிஷாவுடன் பெட்ரூம் சீன் இருக்கும் குஷ்பு ரோஜாவை பெட்டில் தூக்கிய போட்ட மாதிரி திரிஷாவை போடலாமா என்று யோசித்தேன். இப்போதெல்லாம் படங்களில் ரேப் சீன் இல்லை. படங்களின் நாம் பார்க்காத ரேப்’ சீனா என்று கேட்டிருந்தார். மன்சூரின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதனிடையே நடிகை த்ரிஷா மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், த்ரிஷாலுக்கு ஆதாரவாக லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பலர் தங்களது சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்ட நிலையில், மன்சூர் அலிகான் தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே நடிகர் மன்சூர் அலிகான் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்பதாக வெளியிட்ட அறிக்கை கவனத்தை ஈர்த்தது. ஆனால் அடுத்த சில நாட்களில் த்ரிஷா என்னை மன்னித்துவிடு என்று சொல்லவில்லை. மரணித்துவிடு என்று தான் சொன்னேன் என்று கூறிய மன்சூர் அலிகான், த்ரிஷா குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்திருந்தார். இதனால் இந்த சர்ச்சை மீண்டும் வெடித்துள்ளது.
இதில் நடிகை த்ரிஷா தான் பேசிய முழு வீடியோவையும் பார்க்காமல் தனது பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக குறிப்பிட்டிருந்தார். இதனால் நடிகை த்ரிஷா தன்னை பற்றி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தை நீக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மன்சூர் அலிகான் பேசியதற்காக த்ரிஷா தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். பொதுவெளியில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை மன்சூர் அலிகான் உணர வேண்டும்.
நடிகராக இருக்கும் ஒருவரை பல இளைஞர்கள் தங்கள் ரோல்மாடலாக பின்பற்றும் நிலையில், பொதுவெளியில் இப்படி அநாகரிக்கமாக நடந்துகொள்ளலாமா? தான எந்த தவறும் செய்யவில்லை என்று கூறும் மன்சூர் அலிகான், கைது நடவடிக்கைளில் இருந்து தப்பிக்க நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினாரா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், பாதிக்கப்பட்ட தாமே அமைதியாக இருக்கும் நிலையில், தற்போது எதற்காக அவர் வழக்கு தொடர்ந்துள்ளார் என்று தெரியவில்லை என த்ரிஷா தரப்பு கூறியுள்ளது.
இதனிடையே நடிகர் மன்சூர் அலிகான் மனு குறித்து, நடிகைகள் த்ரிஷா, குஷ்பு மற்றும் சிரஞ்சீவி பதில் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது டிசம்பர் 22-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“