வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதது மற்றும் வரிமான முன் வரி செலுத்தது போன்ற வழக்குகளை எதிர்த்து வருமானவரித்துறை மீது நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா தொடர்ந்த வழக்கில், வருமான வரித்துறை பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வருமானவரித்துறையின் கூற்றுப்படி, 2002-2003 ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை ஜூலை 31, 2002க்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் எஸ்.ஜே.சூர்ய நடிப்பு மற்றும் திரைப்படங்களை இயக்குவதன் மூலம் வந்த வருவாய் குறித்து கணக்கு காட்டவில்லை என்று கூறிய வருமானவரித்துறை, சட்டப்பூர்வ காலக்கெடுவிற்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று வழக்கு தொடர்ந்தது.
இதன் காரணமாக எஸ்.ஜே.சூர்யா மீது, வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 139 (1) இன் விதிகளை மீறியதற்காக, வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 276 CC இன் கீழ் கிரிமினல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் பல்வேறு ஆண்டுகளுக்கு முன்பண வரி செலுத்தாமல் இருப்பதும் கட்டணங்களில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது..
இதனிடையே வருமான வரித்துறை, நோட்டீஸ்க்கு எதிரான தான் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு இன்னும் விசாரணையில் உள்ளது எஸ்.ஜே.சூர்யா தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் வருமான வரித்துறையினருக்கு எதிரான தனது மேல்முறையீடு மனு விசாரணையில் இருக்கும்போது, நோட்டீஸ் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்து, மதிப்பீட்டு உத்தரவுகள் செல்லாது எனவும் கூறப்பட்டது.
இதனிடையே கிரிமினல் குற்றச்சாட்டுகளை உறுதி செய்த நீதிபதி ஜி.சந்திரசேகரன், மறுமதிப்பீட்டு நடவடிக்கைகள் நிலுவையில் இருப்பது போதுமான அவகாசம் தேவை என்றும், தீர்ப்பாயம் தீர்ப்பளிப்பது வருமானவரித்துறை குற்றவியல் வழக்கைத் தொடங்குவதற்கு ஒரு தடையல்ல என்றும் தெளிவுபடுத்தினார். இது எஸ்.ஜே.சூர்யாவுக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதது மற்றும் முன்பணமாக வரி செலுத்தாதது போன்ற குற்றச்சாட்டுகளை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த வழக்கில்,மறு உத்தரவு வரும் வரை, உயர் நீதிமன்றம் பிறப்பித்த 07.12.2015 தேதியிட்ட இடைக்கால உத்தரவுகள் தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவித்துள்ளர். சட்டப் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், எஸ்.ஜே. சூர்யா தனது மனு மீதான உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்காகக் காத்திருக்கிறார். இந்த வருமான வரி நடவடிக்கைகள் மற்றும் கிரிமினல் வழக்குகள் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டும்.
மேலும் ஒரு வழக்கில் நியாயமான விசாரணையின் அவசியத்தை வலியுறுத்துகிறது மற்றும் துறை சார்ந்த நடவடிக்கைகள் முடிவதற்குள் குற்றவியல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு எதிராக வாதிடுகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“