மலையாளத்தில் வெளியான மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இந்த படத்தை எடுக்க முக்கிய காரணமாக அமைந்த குணா படத்தை ரீ-ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது. ஆனால் இதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்ட மஞ்ஜூமேல் பாய்ஸ் திரைப்படம் கடந்த பிப்ரவரி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்து. கொடைக்கானல் குணா குகையில் நடந்த உண்மை சம்பவத்தை, அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டது. படத்தின் இறுதிக்காட்சியில் குணா படத்தின் பாடல் இடம்பெற்றிருக்கும்.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதன் காரணமாக கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் சந்தான பாரதி இயக்கத்தில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான குணா படம் படத்தை ரீ-ரிலிஸ் செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை ஏற்ற தயாரிப்பு நிறுவனம் குணா படத்தை ரீ-ரிலீஸ் செய்ய முயற்சிகள் மேற்கொண்டனர்.
இதனிடையே, குணா படத்தின் பதிப்புரிமை தன்னிடம் இருப்பதால் படத்தை ரீ-ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று கன்ஷியம் ஹேம்தேவ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், குணா படத்தை ரீ-ரிலீஸ் செய்ய தடை விதித்திருந்தது. இதனிடையே, பதிப்புரிமை காலம் 2013-ம் ஆண்டுடன் முடிவடைந்துவிட்டதால், ரீ-ரிலீஸ் செய்ய தடை கோர முடியாது என்று பிரமீட் மற்றுமு் எவர் கிரீன் நிறுவனம் தரப்பு வாதம் செய்தது.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், குணா படத்தை ரீ-ரிலீஸ் செய்ய விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குணா படத்தின் ரீ-ரிலீஸ் பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், படத்தை தியேட்டரில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.