/tamil-ie/media/media_files/uploads/2018/10/sarkar-audio.jpg)
Sarkar Audio Songs in Tamilrockers:
சர்கார் திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட நிரந்தர தடை விதித்துள்ளது உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை சன் பிக்சர்ஸ் தொடுத்தது.
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் சர்கார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, பழ.கருப்பையா, ராதாரவி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் தீபாவளியன்று திரைக்கு வர இருக்கிறது.
சர்கார் இணையத்தில் வெளியிட தடை
இந்நிலையில் இந்தப் படத்தை இணையதளங்களில் வெளியிட நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று சன் நெட்வொர்க் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. அம்மனுவில், 3 ஆயிரத்து 710 இணையத்தளங்களின் பெயர்களை குறிப்பிட்டு, காப்புரிமையை மீறி இந்த இணையதளங்களில் சர்கார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். மேலும் இந்த இணையதளங்களை முடக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ண குமார், 3715 இணையதளங்களுக்கு தடை விதித்ததோடு படத்தை இணையதளங்களில் வெளியிட நிரந்தர தடை விதித்தும் உத்தரவிட்டார். இணையதளங்கள் சர்கார் திரைப்படத்தை வெளியிடுவது காப்புரிமை சட்டத்துக்கு எதிரானது என்றும் கூறப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.