/tamil-ie/media/media_files/uploads/2022/09/Untitled-design-10.jpg)
Chennai This Week (Instagram/ @itsyuvan)
Chennai Tamil News: சென்னையில் இந்த வாரம், யுவன் ஷங்கர் ராஜா, சஞ்சய் சுப்ரமணியன் ஆகியோர் இசை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்கள்.
யுவன் ஷங்கர் ராஜா செப்டம்பர் 10 அன்று ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நிகழ்ச்சி நடத்துகிறார். அதே நாளில் ஆர்.ஏ.புரத்தில் சஞ்சய் சுப்ரமணியனின் இசை நிகழ்ச்சியும் நடக்கவிருக்கிறது.
சென்னை முழுவதும் பரபரப்பாக பேசப்படும் யுவன் ஷங்கர் ராஜாவின் (யு1 என்று பிரபலமாக அறியப்படுகிறார்) நேரலை இசை நிகழ்ச்சி (U & I) வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி மாலை 6 மணி முதல் ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.
நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, யுவன் ஷங்கர் ராஜா வரும் சனிக்கிழமை சென்னை மக்களை தனது இசையால் மகிழ வைக்கவிருக்கிறார்.
ஃபீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் மீண்டும் ஒரு முறை மற்றொரு நேரடி இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. இம்முறை சூப்பர் சிங்கர் 7-இன் சிவாங்கி கிருஷ்ணகுமார் கலந்துகொள்ள உள்ளார். செப்டம்பர் 9 அன்று மாலை 6 மணி முதல் அவர் பாடுவதை நேரலையில் கண்டு மகிழலாம்.
சென்னையைச் சேர்ந்த ராக் இசைக்குழுவான RJD அவர்களின் முதல் இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர். அவர்கள் சின் & டோனிக்கின் 'Flutter Fridays' இல் நேரலை திட்டமிட்டுள்ளனர். செப்டம்பர் 9 ஆம் தேதி தி.நகரில் இசை மற்றும் உணவுகளுடன் மகிழலாம்.
முன்னணி கர்நாடக இசைக்கலைஞர் சஞ்சய் சுப்ரமணியன் ‘நம்ம சென்னை’ படத்திற்காக இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். சஞ்சய் சபா நேரலை ஆர்.ஏ.புரத்தில் உள்ள முத்தமிழ் பேரவை அரங்கில் நடைபெறுகிறது. செப்டம்பர் 10ம் தேதி மாலை 6.30 மணி முதல் இந்த நிகழ்ச்சி துவங்குகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.