Chennai Tamil News: சென்னை மக்களின் களைப்பான மாதத்தில் இருந்து விடுமுறை அளிக்கும் விதமாக குணால் கம்ராவின் நிகழ்ச்சி இந்த வாரம் அரங்கேறுகிறது.
சென்னையில் இந்த வாரம், குணால் கம்ராவின் நிகழ்ச்சி மியூசிக் அகாடமியில் செப்டம்பர் 4 ஆம் தேதி நடக்கவிருக்கிறது. செப்டம்பர் 2 ஆம் தேதி நுங்கம்பாக்கத்தில் அத்வா மற்றும் லிட்மஸ் இசைக்குழுக்கள் இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கின்றனர். இந்நிகழ்ச்சியை The Entertainment Factory வழங்குகிறது.

நுங்கம்பாக்கத்தில் அட்வா மற்றும் லிட்மஸ் இசைக்குழுக்களைக் கொண்ட மற்றொரு நிகழ்ச்சியான 'லைவ் அண்ட் லவுட்' கியர்ஸ் மற்றும் கேரேஜில் நடக்க உள்ளது. இந்நிகழ்ச்சி செப்டம்பர் 2ஆம் தேதியன்று இரவு 8 மணி அளவில் நடக்கவுள்ளது.
அடையாறில் உள்ள 'தி பேக்யார்ட்'டில், சந்தையில் கையால் செய்யப்பட்ட பொருட்கள், உணவு மற்றும் பலவற்றை விற்கும் ஸ்டால்கள் அமைக்க திட்டமிடுகின்றனர்.
இங்கு வருகைதரும் பார்வையாளர்களால் இவற்றின் பின்னணியில் உள்ள செயல்முறையைப் பார்த்து மகிழ வாய்ப்பளிக்கப்படுகிறது. செப்டம்பர் 4 ஆம் தேதி காலை 11 மணி முதல் ஸ்டால்கள் திறக்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil