/tamil-ie/media/media_files/uploads/2023/02/Benny-Dayal.jpg)
(Instagram/@bennydayalofficial)
Chennai this week: சென்னையில் இந்த வாரம் இசை கச்சேரி மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதன் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
ராஜசேகர் மாமிடான்னா
ஸ்டாண்ட்-அப் காமெடியன் ஆன ராஜசேகர் மாமிதானா சென்னையில் இந்த வாரம் நேரலையில் நிகழ்ச்சி நடத்துகிறார்.
பல யூடியூப் ஹிட்களைப் பெற்றுள்ள மமிடான்னா, தனது புதிய ஸ்டாண்ட்-அப் காமெடி ஸ்பெஷலான ‘ஃப்ரெண்ட்ஸ்’ அரங்கேற்றவுள்ளார். அவர் நட்பைப் பற்றியும், தனது நண்பர்களுடனான தனது சொந்த அனுபவத்தைப் பற்றியும் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வு பிப்ரவரி 26 அன்று கிரீம்ஸ் சாலையில் நடைபெறுகிறது. இந்த ஞாயிறு மாலை 7 மணி முதல் நகைச்சுவைக்கு தயாராகுங்கள்.
கார்த்திக் குமார்
பிப்ரவரி 25 அன்று நடிகரும் நகைச்சுவை கலைஞருமான கார்த்திக் குமாரின் நான்காவது ஸ்டாண்ட்-அப் ஸ்பெஷல் ‘ஆன்ஸ்ப்ளேனிங்’ நடத்தவுள்ளார். இந்த நிகழ்ச்சி பாலின நிலைப்பாடுகள், அடையாளங்கள், ஆண்மை மற்றும் பலவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குமார் உலகம் முழுவதும் பல நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். அவரது முந்தைய நகைச்சுவை சிறப்புகள் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. இந்த வாரம் ஆழ்வார்பேட்டையில் இரவு 8 மணி முதல் சில சிறந்த நகைச்சுவைகளைப் பாருங்கள்.
தி ஹிஸ்டெரிகல்
இந்த ஞாயிற்றுக்கிழமை, நகரத்தின் அனைத்துப் பெண்களும் கொண்ட நகைச்சுவை குழுவினால் வழங்கப்பட்ட 'தி ஹிஸ்டெரிகல்' இம்ப்ரூவ் நிகழ்ச்சி கண்டு மகிழுங்கள். பிப்ரவரி 26 ஆம் தேதி மாலை 4.30 மணி முதல் ராயப்பேட்டையில் இந்நிகழ்ச்சியை காணலாம்.
பென்னி தயாளின் இசை கச்சேரி
பிரபல பின்னணிப் பாடகர் பென்னி தயாள் தனது சிறந்த இசை வெற்றிகளுடன் சென்னையை மகிழ்விக்க உள்ளார். பிப்ரவரி 24-ம் தேதி வேளச்சேரி பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் கலைஞரின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் சில சிறந்த இசையைக் கேளுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.