scorecardresearch

சென்னையில் இந்த வாரம்: இசைக் கச்சேரிகள்- நகைச்சுவை நிகழ்ச்சிகளுடன் மகிழ தயாரா?

சென்னையில் வருகின்ற டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் கார்னிவல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சென்னையில் இந்த வாரம்: இசைக் கச்சேரிகள்- நகைச்சுவை நிகழ்ச்சிகளுடன் மகிழ தயாரா?
விசாகா ஹரியின் நேரலை நிகழ்ச்சி

சென்னையில் வருகின்ற டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் கார்னிவல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும், ஒருங்கிணைக்கப்பட்டுள்ள நிகழ்ச்சிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விசாகா ஹரியின் நேரலை நிகழ்ச்சி

பிரபல கர்நாட்டிக் இசைக்கலைஞரான விசாகா ஹரி இந்த மார்கழி மாதத்தை துவக்க தங்களது இசை கச்சேரியுடன் மக்களை சந்திக்க வருகிறார். இன்று (டிசம்பர் 2ஆம் தேதி) மாலை 6.30 மணி முதல் ரசிக ரஞ்சனி சபாவில் இந்நிகழ்ச்சி நடைபெறும்.

கார்த்திக் குமாரின் ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சி:

திரைப்பட நடிகரும் ஸ்டாண்டப் நகைச்சுவை கலைஞருமான கார்த்திக் குமார் தனது ஸ்டாண்டப் ஸ்பெஷல் ‘ஆன்ஸ்ப்ளேனிங்’ நிகழ்ச்சியை வரும் டிசம்பர் 3ஆம் தேதி அன்று சென்னையில் நடத்தவிருக்கிறார். இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் 600க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

அவரது மூன்று தனி ஸ்டாண்டப் சிறப்புகளும் வெற்றி பெற்றதாகக் கருதப்படும் நிலையில், ‘ஆன்ஸ்ப்ளேனிங்’ எனும் இந்நிகழ்ச்சி பாலின நிலைப்பாடுகள் மற்றும் ஆண்மை பற்றியது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் தி சவேராவில் உள்ள சவுத் ஆஃப் காமெடி கிளப்பில் இந்நிகழ்ச்சியை நேரலையில் கண்டு மகிழலாம்.

இசைக்குழு மற்றும் பான்-இந்தியன் குரல் குழுவான EL FE இந்த வாரம் நகரத்தில் தங்களின் முதல் தனி இசை நிகழ்ச்சியை வழங்க உள்ளது. ரோ வின்சென்ட் இயக்கிய EL FE ஆக்ட் டிசம்பர் 4 ஆம் தேதி சென்னையில் நடத்த வருகிறார்கள். ஆழ்வார்பேட்டையில் சில அழகான இசை மற்றும் பொழுதுபோக்கிற்காக வருகை தரலாம்.

சென்னை கார்னிவல்

ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மதியம் 3 மணி முதல் நம்ம சென்னை கார்னிவல் நடைபெறுகிறது. இரண்டு நாள் திருவிழாவில் உணவு, ஃபேஷன் மற்றும் வாழ்க்கை முறை கண்காட்சிகள், குழந்தைகளுக்கான பல்வேறு பட்டறைகள் மற்றும் செயல்பாடுகள் உள்ளன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Chennai this week filled with music and entertainment standup shows

Best of Express