இசை, காமெடி... சென்னையில் இந்த வார கொண்டாட்டம்!

சென்னையில் இந்த வாரம் நாடகங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள், இசைக் கச்சேரிகள் ஆகியவை மூலம் மக்கள் மகிழ்விக்க கலைஞர்கள் களமிறங்க உள்ளார்கள்.

சென்னையில் இந்த வாரம் நாடகங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள், இசைக் கச்சேரிகள் ஆகியவை மூலம் மக்கள் மகிழ்விக்க கலைஞர்கள் களமிறங்க உள்ளார்கள்.

author-image
WebDesk
New Update
இசை, காமெடி... சென்னையில் இந்த வார கொண்டாட்டம்!

Jord Indian/Facebook

Chennai this week: சென்னையில் இந்த வாரம் நாடகங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள், இசைக் கச்சேரிகள் ஆகியவை மூலம் மக்கள் மகிழ்விக்க கலைஞர்கள் களமிறங்க உள்ளார்கள். இந்த வார பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

ஜோர்டு இந்தியன் லைவ்

Advertisment

சென்னையில் ஜோர்டுஇந்தியன் குழுவின் இசைக்கச்சேரி ஃபீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் நடைபெற உள்ளது. இசை, உணவு என்று பல விருந்துகளுடன் மக்களை மகிழ்விக்க காத்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி வருகின்ற நவம்பர் 12 ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று நடைபெறுகிறது.

publive-image

60 நிமிட நகைச்சுவை

வருகின்ற நவம்பர் 13ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), பெசன்ட் நகரில் உள்ள பர்கர்மேன் உணவகத்தில் சில வேடிக்கையான நகைச்சுவை நடிகர்கள் நிகழ்ச்சியைக் காண தயாராகுங்கள். இந்த நிகழ்ச்சியில் நவ்நீத், பிரகாஷ் குமார், பிரபு கிருஷ்ணமூர்த்தி, மனோஜ்குமார் சந்திரகுமார், குணா கண்ணன் மற்றும் சாய் ஆனந்த் ஆகியோர் நடத்தவுள்ளனர். நவம்பர் 13 ஆம் தேதி மாலை 4 மணி முதல் ஒரு மணிநேரம் சிரிக்கத் தயாராகுங்கள்.

இசையும் நகரமும்

Advertisment
Advertisements

இசையின் வகைகளான ராக், எலக்ட்ரானிக் மற்றும் ஜாஸ் இசைக்கு பெயர் பெற்ற MaMoGi இசைக்குழு RA புரத்தில் உள்ள பிளாக் ஆர்க்கிட்டில் நிகழ்ச்சி நடத்தவுள்ளது. இசைக்குழுவில் கலைஞர்களான மோகினி டே ஹார்ட்சுச், ஜினோ பேங்க்ஸ் மற்றும் மார்க் டே ஹார்ட்சுச் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நவம்பர் 11 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று அவர்களின் நிகழ்ச்சியை நேரலையில் மக்கள் பார்க்கலாம்.

நாடக விழா

மெட்ராஸில் உள்ள அலையன்ஸ் ஃபிரான்சைஸில் ஒரு மாத நாடக விழா நடக்கவிருக்கிறது. புதிய குறும்படங்கள் வடிவில் தரமான தியேட்டரைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நவம்பர் 27 ஆம் தேதியில் இருந்து இந்நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

டேனியலின் நிகழ்ச்சி

நகைச்சுவை நடிகர் டேனியல் பெர்னாண்டஸ் தனது இரண்டாவது நகைச்சுவை சிறப்பு நிகழ்ச்சியுடன் (Alive & Vaccinated) மீண்டும் வந்துள்ளார். நவம்பர் 12 ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 7 மணி முதல் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள 'தி ஸ்டேஜ்' பெர்னாண்டஸின் நகைச்சுவையை நேரலையில் பார்க்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Entertainment News Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: