4 நகைச்சுவை நடிகர்கள்; 1 மேடை: சென்னை மக்களுக்கான பொழுதுபோக்கு ஸ்பெஷல்

Chennai this week: சென்னை மக்களை இசையிலும் நகைச்சுவையில் மகிழ்விக்க பல நிகழ்ச்சிகள் இந்த வாரம் நடக்கவிருக்கிறது.

Chennai this week: சென்னை மக்களை இசையிலும் நகைச்சுவையில் மகிழ்விக்க பல நிகழ்ச்சிகள் இந்த வாரம் நடக்கவிருக்கிறது.

author-image
WebDesk
New Update
4 நகைச்சுவை நடிகர்கள்; 1 மேடை: சென்னை மக்களுக்கான பொழுதுபோக்கு ஸ்பெஷல்

சென்னையில் இந்த வாரம் நடக்கவிருக்கும் ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சி (Twitter/@soco_chennai)

Chennai this week: சென்னை மக்களை இசையிலும் நகைச்சுவையில் மகிழ்விக்க பல நிகழ்ச்சிகள் இந்த வாரம் நடக்கவிருக்கிறது.

Advertisment

ஸ்டாண்ட்-அப் காமெடிகள் முதல் நேரடி கச்சேரிகள் வரை பல நிகழ்ச்சிகள் சென்னையில் நடக்கவுள்ளது. இவற்றின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

publive-image

4 நகைச்சுவை நடிகர்கள் 1 மேடை:

Advertisment
Advertisements

சென்னையில் உள்ள சிறந்த நகைச்சுவை நடிகர்களான பிரவீன் குமார், குரு நாராயண், சுதர்ஷன் ராமமூர்த்தி  மற்றும் யோகேஷ் ஜெகநாதன் ஆகியோர் இனைந்து கலக்கவிருக்கும் ‘காமெடி கில்லாடீஸ்’, அக்டோபர் 15ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இது சென்னையில் உள்ள சவுத் ஆஃப் காமெடி கிளப்பில் (சோகோ) தி சவேராவில் நேரலையில் ஒளிபரப்பப்படும்.

இசை மழை:

ஃபீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 16), முன்னணி கலைஞர்கள் இடம்பெறும் 'SteppinOut' என்கிற இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. இஷான் கௌஷிக், அஷ்வின் அத்வானி, அனுமிதா நடேசன், M S கிருஷ்ணா போன்ற கலைஞர்கள் மற்றும் The Yellow Diary இசைக்குழுவினர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

ஜன கண மன:

இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் முன்னதாகவே நடைபெறவிருந்த இந்த நிகழ்வு, வரும் அக்டோபர் 16ஆம் தேதி மீண்டும் நடக்கவிருக்கிறது. இந்த நிகழ்வில் 75 முன்னணி பாடகர்கள் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர். சுஜாதா மோகன், ஸ்ரீனிவாஸ், ஸ்வேதா மோகன், சைந்தவி, ரம்யா என் எஸ் கே, சத்யபிரகாஷ், டிரம்ஸ் சிவமணி உள்ளிட்ட சில கலைஞர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லிவ் & லவுட்:

இந்த அக்டோபர் மாதம், 'ஜங்க்யார்ட் க்ரூவ்' என்ற இசைக்குழு நம்மை மகிழ்விக்க வரவிருக்கிறது. இந்த நிகழ்வு அக்டோபர் 14 அன்று இரவு 8 மணி முதல் கியர்ஸ் அண்ட் கேரேஜில் நேரலையில் நடக்கவிருக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Entertainment News Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: