Chennai this week: சென்னையில் இந்த வாரம், மக்களை மகிழ்விப்பதற்காக நேரடி இசைக் கச்சேரிகள், ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சிகள் மற்றும் உணவுத் திருவிழா என்று பல்வேறு நிகழ்ச்சிகள் வரிசைகட்டி நிற்கிறது.
வேலை களைப்பிலிருந்து மீள்வதற்காக பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தேடிச்செல்லும் மக்களுக்காக இந்த நிகழ்ச்சிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாடகர் தேவாவின் நேரலை:
பிரபல பாடகர் தேவாவின் இசைக் கச்சேரியை மக்கள் நேரில் கண்டு மகிழும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 'தேவா தி தேவா' என்று அழைக்கப்படும் இந்த கச்சேரி நவம்பர் 20 அன்று சென்னையில் நடைபெறவிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் புகழ்பெற்ற இந்திய இசைக்கலைஞர்கள் மற்றும் பின்னணி பாடகர்களை தொகுத்து வழங்கவிருக்கின்றனர். வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 20ஆம் தேதி) நேரு உள்விளையாட்டு அரங்கில் உங்களுக்குப் பிடித்த சில தமிழ் பாடல்களுடன் சேர்ந்து பாட தயாராகுங்கள்.
ஆண்ட்ரியா பங்கேற்கும் இசை நிகழ்ச்சி
பிரபல பின்னணி பாடகி மற்றும் நடிகையுமான ஆண்ட்ரியா ஜெர்மியா, இசையமைப்பாளர் ஸ்டீபன் தேவஸ்ஸி மற்றும் பல்வேறு கலைஞர்களுடன் இசை நிகழ்ச்சி நேரலையில் நடைபெறுகிறது. வரும் நவம்பர் 19ஆம் தேதி மாலை 5 மணி முதல் பிரசாத் ஸ்டுடியோவில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
ஸ்டீபன் சகரியாவின் கச்சேரி
அவருடன் பாடகி ஸ்ரீநிஷா ஜெயசீலன் கலந்து கொள்கிறார். வரும் வெள்ளிக்கிழமை ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் இந்நிகழ்ச்சியை கண்டு மகிழலாம்.
பிக் பைட் 2.0
'பிக் பைட் 2.0 - உணவுத் திருவிழா' வருகின்ற நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தத் திருவிழாவில் 40க்கும் மேற்பட்ட உணவுக் கடைகள் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியை கண்டு மகிழ வேண்டும் என்று நினைத்தால், இந்த வார இறுதியில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டிக்கு செல்லுங்கள்.
கஜோல் சீனிவாசனின் நகைச்சுவை நிகழ்ச்சி
நகைச்சுவை நடிகர் கஜோல் சீனிவாசன் தனது நகைச்சுவை நிகழ்ச்சியை வருகின்ற நவம்பர் 17 ஆம் தேதி அடையாறு பாக்கியார்ட்டில் நடத்துகிறார். சென்னையில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் ஒரு மணிநேரம் புதிய நகைச்சுவைகள் மற்றும் பொழுதுபோக்கு கதைகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். கஜோல் சீனிவாசனின் இந்த நிகழ்ச்சி இரவு 7:30 மணி முதல் நேரலையில் இருக்கும்.
அபிஷிக் x சோடா
மெட்ராஸ் காமெடி சர்க்யூட் வழங்கும், ‘அபிஷிக் x சோடா லைவ்’ ஒரு ஆங்கில நகைச்சுவை நிகழ்ச்சி நடக்கவுள்ளது. அபிஷேக் விஜய்குமார் ராமஸ்வாமி மற்றும் சுதர்சன் ராமமூர்த்தி இடம்பெறும் இந்த நிகழ்ச்சி இருவரின் சிறந்த ஸ்டாண்ட்-அப் ஜோக்குகளின் கலவையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி மாலை 7 மணி முதல் இந்த நிகழ்வு நேரலையில் நடைபெறும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil