Chennai this Week: புத்தாண்டைக் கொண்டாட மக்களிடையே இசைக் கச்சேரிகள் மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகளுடன் கலைஞர்கள் தயாராக உள்ளனர்.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் 2022ஆம் ஆண்டின் இறுதி வாரத்தில், பல்வேறு கிளாசிக்கல் இசை கச்சேரிகள் மற்றும் சில நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அவற்றின் பட்டியலை காணலாம்:

மார்கழி மக்கள் இசை:
தமிழ்நாட்டின் பாரம்பரிய இசை மற்றும் நடனம், கானா, ஹிப்-ஹாப், ஒப்பாரி மற்றும் பல விடுதலைப் பாடல்கள் அடங்கிய மூன்று நாள் திருவிழா சென்னையில் நடக்கவிருக்கிறது. 250 கலைஞர்களைக் கொண்டு நடக்கவிருக்கும் இந்த மக்கள் இசை, டிசம்பர் 28,29,30 ஆகிய தினங்களில் சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் கான்சர்ட் ஹால், சென்னை சேத்துப்பட்டில் நடைபெறுகிறது.
பிரதீப் குமார் இசை கச்சேரி:
பிரபல பாடகரான பிரதீப் குமார், வரும் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னைக்கு வந்துள்ளார். மெட்ராஸ் மற்றும் கபாலி போன்ற பல பிரபலமான தமிழ் திரைப்படங்களில் தனது பாடல்களுக்காக நன்கு அறியப்பட்ட ஒரு பாடகர் ஆவார். அவரது நேரடி கச்சேரி ‘மாயநதி’, நேரு உள்விளையாட்டு அரங்கில் டிசம்பர் 31ம் தேதி நடக்கிறது.
சார்லஸ்:
இந்த வாரம், நகைச்சுவை நடிகர் ‘சார்லஸ் தி ஃபிரெஞ்ச்’ ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்காக சென்னையில் கால் பதிக்கிறார். நகைச்சுவை நடிகர் தற்போது இந்திய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அவர் டிசம்பர் 29 அன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள ‘தி ஸ்டேஜ்’ அரங்கில் தனது நிகழ்ச்சியை அரங்கேற்றவுள்ளார்.
புத்தாண்டு விழா 2023
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தனது விழா 2023 உடன் புத்தாண்டைக் கொண்டாடத் தயாராக உள்ளது. ஆக்சாண்டே என்டர்டெயின்மென்ட் வழங்கும் இந்த விழாவில், கார்னிவல் கேம்கள், திறமை வேட்டை, விரிவான பல்வேறு உணவு வகைகள் மற்றும் அதிர்ஷ்டக் குலுக்கல் போன்ற 50க்கும் மேற்பட்ட செயல்பாடுகள் உள்ளன. புத்தாண்டை முன்னிட்டு மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு பீச் ரிசார்ட் ஹோட்டலில் மதியம் 3 மணிக்கு இவ்விழா நடைபெறுகிறது.
இசை கச்சேரிகள்:
டிசம்பர் மாதம் முடிவடைந்தாலும், மார்கழியின் ஆவி நகரத்தில் உயிர்ப்புடன் இருக்கிறது. மெட்ராஸ் மியூசிக் அகாடமி இந்த வாரம் கிளாசிக்கல் கச்சேரிகளை நடத்துகிறது.
அனிருத் வெங்கடேஷின் குரல் நிகழ்ச்சி டிசம்பர் 28 அன்று காலை 11.45 மணிக்கு நேரலை. அவருடன் எம் ஸ்ரீகாந்த் வயலினும், எஸ் கார்த்திக்நாராயணன் மிருதங்கமும் இசைக்க உள்ளனர்.
சிக்கில் மாலா சந்திரசேகரின் புல்லாங்குழல் நிகழ்ச்சி, வயலினில் வி.வி.எஸ்.முராரி, மிருதங்கத்தில் திருவனந்தபுரம் வி.பாலாஜி மற்றும் மோஹர்சிங்கில் எம்.குருராஜ் ஆகியோரின் இசை நிகழ்ச்சி, டிசம்பர் 30 காலை 9 மணிக்கு நேரலையில் நடக்கவிருக்கிறது.
டிசம்பர் 30 ஆம் தேதி பாடகர்கள் ஜே பி கீர்த்தனா, டாக்டர் கே காயத்ரி, ராமகிருஷ்ணன் மூர்த்தி ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளும், சித்ரவீணையில் விஷால் ஆர் சபுரத்தின் நிகழ்ச்சியும் நடைபெறும்.
புத்தாண்டு தினத்தன்று, பாடகர்கள் டி என் எஸ் கிருஷ்ணா, ஸ்வேதா பாலசுப்ரமணியன், கே என் விஷ்ணுதேவ் ஆகியோர் இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். வயலின் கலைஞர்கள் மற்றும் ஃப்ளாட்டிஸ்ட் ஜே பி ஸ்ருதி சாகர் ஆகிய மூவரும் அன்றைய தினம் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளனர்.
ஜனவரி 1 ஆம் தேதி காலை 9.15 மணி முதல் ராம்நாத் மற்றும் கோபிநாத் ஆகியோரின் தங்களின் இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil