scorecardresearch

கார்த்திக் குமார் காமெடி, ஸ்பெஷல் கிரிக்கெட்டர்… சென்னையில் இந்த வாரம்

வருகின்ற 12ஆம் தேதியன்று நகைச்சுவை நடிகரான கார்த்திக் குமாரின் நான்காவது ஸ்டாண்ட்-அப் ஸ்பெஷல் ‘ஆன்ஸ்ப்ளேனிங்’ நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

அடையாறில் உள்ள 'தி பேக்யார்டில்' காலை 10 மணிக்கு நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. (Instagram/@evamkarthik)
அடையாறில் உள்ள 'தி பேக்யார்டில்' காலை 10 மணிக்கு நகைச்சுவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. (Instagram/@evamkarthik)

Chennai this week: பிப்ரவரி முதல் வாரத்தில், சென்னை மக்களின் பொழுதுபோக்கிற்காக பல்வேறு நகைச்சுவை நிகழ்ச்சிகள், இசை நடனம் கலந்த கச்சேரிகள் என பலவகை நடைபெறவிருக்கிறது.

இந்த வாரம் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

ஆன்ஸப்லைனிங்:

இம்மாதம் வருகின்ற 12ஆம் தேதியன்று நகைச்சுவை நடிகரான கார்த்திக் குமாரின் நான்காவது ஸ்டாண்ட்-அப் ஸ்பெஷல் ‘ஆன்ஸ்ப்ளேனிங்’ நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

தி கிரேடு கிரிக்கெட்டர்:

கிரிக்கெட் சீசனின் உத்வேகத்தை கையாளும் விதமாக, இந்த வாரம் சென்னையில் ‘தி கிரேடு கிரிக்கெட்டர்’ நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. ஆழ்வார்பேட்டையில் உள்ள ‘தி ஸ்டேஜில்’ கிரிக்கெட்டைப் பற்றிய அவர்களின் சுவாரஸ்யமான அனைத்தையும் நேரலையில் கண்டு மகிழலாம்.

பிப்ரவரி 11ஆம் தேதியன்று இரவு 9:30 மணி முதல் இயன் ஹிக்கின்ஸ் மற்றும் சாமுவேல் ஜேம்ஸ் அவர்களின் நிகழ்ச்சியை நேரில் கண்டு மகிழலாம்.

ஸ்டாண்ட்-அப் காமெடி:

பிப்ரவரி 12 அன்று நகைச்சுவை நடிகரான கார்த்திக் குமாரின் நான்காவது ஸ்டாண்ட்-அப் ஸ்பெஷல் ‘ஆன்ஸ்ப்ளேனிங்’ நடத்தவிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி பாலின நிலைப்பாடுகள், அடையாளங்கள், ஆண்மை மற்றும் பலவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவரது முந்தைய நகைச்சுவை சிறப்புகள் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. அடையாறில் உள்ள ‘தி பேக்யார்டில்’ காலை 10 மணி முதல் இந்த வார ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

மியூசிக் அகாடமி:

கலைஞர் மாளவிகா சருக்காய் இந்த வாரம் மெட்ராஸ் மியூசிக் அகாடமியில் நிகழ்ச்சி நடத்துகிறார். ‘அனுபந்த்’ (இணைப்பு என்று பொருள்) என்று அழைக்கப்படும் கலைஞர், வரும் சனிக்கிழமை இரவு 7 மணி முதல் நேரலையில் இந்த நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார்.

ஹிஸ்டரிகள் இம்ப்ரொவ்

சென்னை மற்றும் பெங்களூரு முழுவதும், எழுதப்படாத நகைச்சுவைக்கு பெயர் பெற்ற இந்த குழு, பிப்ரவரி 12 ஆம் தேதி காலை 10.30 மணி முதல் தி ஆர்டரியில் நேரடியாக நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். இந்த நிகழ்ச்சி காதலர் தின ஸ்பெஷலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நுழைவுச் சீட்டு ரூ. 499 (ஒவ்வொரு டிக்கெட்டும் இருவரை அனுமதிக்கும், ஒன்று பெண்ணாக இருக்க வேண்டும்).

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Chennai this week programs standup comedy concerts valentines special