Chennai Tamil News: சென்னை மக்களின் பொழுதுபோக்கிற்காக இந்த வாரம் பல நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 16ஆம் தேதி, சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் 'மலைகளில் கதைகள்' என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது.

எப்பொழுதும் நிரம்பி வழியும் உற்சாகத்துடன், சென்னை நகரவாசிகளுக்கு இந்த வாரம் ஏராளமான நிகழ்வுகளை வழங்குகிறது, அவற்றின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
மெட்ராஸ் காமெடி சர்க்யூட்டின் பிரபலங்கள்:
சென்னை பேக்யார்டில், இந்த நகைச்சுவை நிகழ்ச்சி தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நடக்கவிருக்கிறது. மெட்ராஸ் காமெடி ஷோ, காமிக்ஸ்டான் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர்களான அண்ணாமலை, நிகில் ஜெயின், நடாஷா ரஸ்தோகி, மனோஜ்குமார் சந்திரகுமார், பிரபு கிருஷ்ணமூர்த்தி மற்றும் சந்தீப் நங்கனி ஆகியோருடன் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி, சனிக்கிழமை மாலை 6 மணி முதல் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியை கண்டு மகிழலாம்.
சென்னை ஆர்ட் தியேட்டரில் இசை நிகழ்ச்சி:
சென்னை ஆர்ட் தியேட்டரில் வருகின்ற செப்டம்பர் 16ஆம் தேதியன்று ஆழ்வார்பேட்டையில் 'மலைகளின் கதைகள்' - என்கிற இசை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. இந்த நிகழ்விற்கு வருகைதரும் பார்வையாளர்கள் தங்களின் சொந்த இசைக்கருவிகளை கொண்டு வரலாம் என்று கூறுகின்றனர். வரும் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இசை நிகழ்ச்சியில் சென்னை மக்கள் சென்று மகிழலாம்.
நகைச்சுவை நடிகர் பிரவீன் குமாரின் நிகழ்ச்சி:
பெங்களூரைச் சேர்ந்த ஸ்டாண்ட்-அப் காமெடியன் பிரவீன் குமாரை தொகுத்து வழங்க 'தி பேக்யார்ட்' தயாராக உள்ளது. பிரவீன் குமார் மற்றும் குண கண்ணன் ஆகியோர் செப்டம்பர் 17ஆம் தேதி, சனிக்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை மக்களை மகிழ்விப்பதற்காக நகைச்சுவை நிகழ்ச்சி ஒருங்கிணைத்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil