சென்னையில் இந்த வாரம் மகளிர் தினத்தை முன்னிட்டு, இரண்டு ஸ்டாண்டப் காமெடிகள், செல்லப் பிராணிகளுக்கான விழா மற்றும் பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அவற்றின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
செல்லப்பிராணிகளின் நிகழ்ச்சி
சென்னையில் இந்த வாரம் 'பெட்கலா' நடைபெற உள்ளது. செல்லப் பிராணிகளுக்கான ஃபேஷன் ஷோ, டாக் பூல் பார்ட்டி, இன்டராக்டிவ் கேம்கள் மற்றும் நிபுணத்துவ பேச்சுக்கள் போன்ற பல செயல்பாடுகளுடன், இந்த நிகழ்வு அனைவருக்கும் திறந்திருக்கும்.
வருகின்ற மார்ச் 12 ஆம் தேதி மதுரவாயல் எஸ்பிபி கார்டனில் காட்சிப்படுத்த உள்ளது. இந்த கண்காட்சி காலை 10 மணி அளவில் தொடங்க உள்ளது.
ஸ்டாண்டப் காமெடி
மகளிர் தின ஸ்பெஷலாக, மார்ச் 8 அன்று நகைச்சுவை நடிகரான கார்த்திக் குமாரின் நான்காவது ஸ்டாண்டப் ஸ்பெஷல் ‘ஆன்ஸ்ப்ளேனிங்’ அரங்கேற்றப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சி பாலின நிலைப்பாடுகள், அடையாளங்கள், ஆண்மை மற்றும் பலவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குமார் உலகம் முழுவதும் பல நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். அவரது முந்தைய நகைச்சுவை சிறப்புகள் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. சென்னை அடையாறில் உள்ள 'தி பேக்யார்டில்' இரவு 7 மணி முதல் இந்த வாரம் சில சிறந்த நகைச்சுவைகளை காணாதவறாதீர்கள்.
'திங்கிங் அவுட் லவுட்’
மனோஜ் பிரபாகர், ஒரு ஸ்டாண்ட்அப் காமெடியன், அவரது தனி ஆங்கில ஸ்டாண்டப் நகைச்சுவை நிகழ்ச்சியான ‘திங்கிங் அவுட் லவுட்’ சென்னையில் அரங்கேற்றவுள்ளார். இந்த நிகழ்ச்சி அவரது வேடிக்கையான எண்ணங்கள் மற்றும் அவதானிப்புகள் அனைத்தையும் தொகுக்கிறது. பல்வேறு நகரங்கள் முழுவதும் சுற்றுப்பயணம் செய்த பிரபாகர், மார்ச் 12 அன்று SOSஇல் மாலை 7 மணி முதல் இந்நிகழ்ச்சியை தொடங்க இருக்கிறார்.
மெட்ராஸ் காமெடி ஷோ
மெட்ராஸ் காமெடி சர்க்யூட் இந்த வாரம் மெட்ராஸ் காமெடி ஷோவை வழங்குகிறது. நகைச்சுவை நடிகர்களான ரிஷா ராஜாஸ், செல்வ சுந்தர், கிருதின் குமார், வைசாக் மற்றும் குண கண்ணன் ஆகியோர் இடம்பெற்றுள்ள இந்த நிகழ்ச்சி, அவர்கள் யூடியூப்பில் நிகழ்த்தும் ஒரு பதிவு நிகழ்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சனிக்கிழமை மாலை 4 மணி முதல் அடையாறில் உள்ள 'தி பேக்யார்டில்' காணாதவறாதீர்கள்.
மகளிர் தின சிறப்பு
மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியாக, சென்னையில் சிறந்த நகைச்சுவை நடிகர்கள் (ஏழு பெண் காமிக்ஸ் மற்றும் மூன்று ஆண்கள்) இடம்பெறும் நகைச்சுவை நிகழ்ச்சியை 'மேடை - தி ஸ்டேஜ்' வழங்கவிருக்கிறார்கள். வருகின்ற மார்ச் 12 அன்று மாலை 4.30 மணி முதல் இந்த வாரத்திற்கான நகைச்சுவை நிகழ்ச்சியை காணாதவறாதீர்கள்.
கலை நிகழ்வு
அடையாரில் உள்ள தி பேக்யார்டில் ஒரு 'பாப்-அப்' நிகழ்வை அமைக்கவிருக்கிறார்கள். கலை மற்றும் படைப்பாற்றல் என்ற கருப்பொருளின் அடிப்படையில், Cozy Canvas மார்ச் 12 அன்று மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை சென்னையில் தங்களது நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறார்கள். இந்த நிகழ்வு கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் அச்சு தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே என்று கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.