Advertisment
Presenting Partner
Desktop GIF

விஜய்க்கு அபராதம் விதித்த காவல்துறை : இதுதான் காரணம்

நடிகர் விஜய் கார் போக்குவரத்து விதிகளை மீறியதால் ரூ.500 அபராதம் விதித்து சென்னை போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
விஜய்

விஜய்

நடிகர் விஜய் கார் போக்குவரத்து விதிகளை  மீறியதால் ரூ.500 அபராதம்  விதித்து சென்னை போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Advertisment

சென்னை அருகே பனையூர் இல்லத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை  நடிகர் விஜய் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து நேற்று பிற்பகல் காரில் புறப்பட்டார். அப்போது அக்கறை சந்திப்பில் உள்ள சிக்னலில் சிவப்பு விளக்கு  எரிந்த நிலையில், விஜய்யின் கார் சிக்னலில் நிற்காமல் சென்றது. இந்த வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவியது.

இந்நிலையில் சிக்னலை மீறியதற்கு ரூ. 500 அபராதம் விதித்து சென்னை போக்குவரத்து காவல்துறையினர் நடிகர் விஜய்க்கு ரசீது அனுப்பினர்.  இதற்கு முன்பாக காரில் கருப்பு கண்ணாடி ஒட்டியதற்காக நடிகர் விஜய்க்கு  அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment