சென்னை மடிப்பாக்கத்தில் வேறொருவருக்கு சொந்தமான நிலத்தை நடிகை குட்டி பத்மினி, போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்தாக கடந்த 2011-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு தற்போது, ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகைகளில் ஒருவருவரும் பா.ஜ.க. பிரமுகருமான குட்டி பத்மினி, சென்னை மடிப்பாகத்தில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான ரூ8 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம், அபு பாஷா என்பவரின் மனைவி இம்ரானா என்பவருக்கு விற்றதாக கடந்த 2011-ம் ஆண்டு மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், வழக்கை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்ற நிலையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி இந்த வழக்கு, மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த குற்றப்பிரிவு அதிகாரிகள், வழக்கின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்த நிலையில். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று குட்டி பத்மினி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, ஜெயச்சந்திரன், நிலத்தின் உரிமை தொடர்பான வழக்கு உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், உரிமையியல் தொடர்பான வழக்கை குற்றவியல் வழக்காக விசாரிகக் முடியாது என்று கூறி, குட்டி பத்மினிக்கு எதிராக வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“