Advertisment

’பெரிய தைரியம் வேணும்’ தீபிகாவுக்கு பாராட்டுக்களை குவித்து வரும் ‘சபாக்’ ட்ரைலர்!

Deepika Padukone : இது உணர்வுகளை ஒன்றிணைக்கும் ஒரு நம்பமுடியாத பயணம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chhapaak Trailer, Deepika Padukone

Chhapaak Trailer

Chhapaak Trailer : பாலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள ‘சபாக்’ படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குநர் மேக்னா குல்ஸார், இயக்கியுள்ள இப்படம் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வாலை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்டுள்ளது. இதில் லட்சுமி அகர்வாலாக தீபிகா படுகோனே நடித்துள்ளார்.

Advertisment

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸுடன் இணைந்து, மேக்னா குல்ஸார், தீபிகா படுகோனே இதனை தயாரித்துள்ளனர். பக்கத்து வீட்டுப் பெண் போன்று இருக்கும் தீபிகா, துரதிருஷ்டவசமான ஆசிட் தாக்குதலில் சிக்கி, அதிலிருந்து  தப்பிக்கிறார். ட்ரைலரைப் பார்க்கும் போதே, இது வெகுஜன மக்களைக் கவரும் எனத் தெரிகிறது.

இது குறித்துப் பேசிய தீபிகா, ”இது உணர்வுகளை ஒன்றிணைக்கும் ஒரு நம்பமுடியாத பயணம், அது எவ்வாறு பெறப்பட்டது, எப்படி நடக்கிறது என்பதைப் பொருட்படுத்தாமல் உணர்கிறேன். இது எனது தொழில் வாழ்க்கையில் மிகச் சிறந்த படமாக இருக்கும், உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படம் நமக்கு ஏற்படுத்திய தாக்கம், இதனை திரைப்படமாக நாங்கள் செய்ததற்கான காரணம், நாங்கள் அதில் பார்த்த விஷயங்களை நீங்களும், அதில் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். நாங்கள் அதை நிறைய அன்பு, ஆர்வம், உற்சாகம் மற்றும் நிறைய பொறுப்புடன் செய்துள்ளோம்" என்றார்.

ப்ராஸ்தெடிக் மேக்கப்போடு தீபிகா படுகோனை பார்த்த ரசிகர்கள், அவருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

Deepika Padukone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment