'நாம் சூரியனாக இருப்போம் எந்த நாயும் குரைச்சிட்டு போகட்டும்'; பயில்வானுக்கு வெங்கடேஷ் பட் பதிலடி!

வெங்கடேஷ் பட் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டதால், அவரை விஜய் டிவியில் இருந்து நீக்கிவிட்டதாக பயில்வான் கூறியிருந்தார்.

வெங்கடேஷ் பட் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டதால், அவரை விஜய் டிவியில் இருந்து நீக்கிவிட்டதாக பயில்வான் கூறியிருந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Venkatesh Bhar Pailwan

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நடுவர் வெங்கடேஷ் பட் தற்போது சன்டிவியின் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியில், நடுவராக பணியாற்றி வரும் நிலையில், தன்னை பற்றி அவதூறாக கருத்து தெரிவித்த நடிகர் பயில்வான் ரங்கநாதன் குறித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisment

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதலில், செப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் சீசனில், வெங்கடேஷ் பட் விலகியதை தொடர்ந்து, அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ், செப் தாமுவுடன் இணைந்து நிகழ்ச்சியின் நடுவராக பணியாற்றி வருகிறார்.

இதனிடையே இந்நிகழ்ச்சியில், தொகுப்பாளினியாக இருந்த மணிமேகலை, குக்காக வந்த பிரியங்கா இருவருக்கும் இடையே எழுந்த மோதலில், மணிமேகலை நிகழ்ச்சியை விட்டு வெளியேறிவிட்டார். அதே சமயம், பிரியங்கா குக் வித் கோமாளி டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். இதனிடையே மணிமேகலை பிரியங்கா மோதல் குறித்து கருத்து தெரிவித்த விஜய் டிவி பிரபலங்கள் பிரியங்காவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

அதே சமயம் சமூகவலைதளங்களில் மணிமேகலைக்கு ஆதரவு அதிகமானது. இது குறித்து குக் வித் கோமாளியின் முன்னாள் நடுவர் வெங்கடேஷ் பட் தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்திருந்தார். இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், வெங்கடேஷ் பட் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்டதால், அவரை விஜய் டிவியில் இருந்து நீக்கிவிட்டதாக கூறியிருந்தார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், வெங்கடேஷ் பட் ஆதரவாளர்கள் பலரும் கருத்து தெரிவிக்க தொடங்கினர்.

Advertisment
Advertisements

தற்போது இது குறித்து விளக்கம் அளித்துள்ள வெங்கடேஷ் பட், பொது வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம். பயில்வான் ரங்கநாதன் எதற்காக இப்படி எல்லாம் பேசுகிறார் என்று எனக்கு தெரியவில்லை. அவருக்கு மனநிலை சரியில்லாமல் போய்விட்டதா? அல்லது பணத்துக்காக இப்படி பேசுகிறாரா? என்று புரியவில்லை. எது எப்படியோ நம்மைப் பற்றி ஒருவர் தவறாக பேசி விட்டார் என்றால் அவரைப் பற்றி நாமும் அதேபோல தவறாக பேச வேண்டும் என்று அவசியமில்லை. அதனால் என்னுடைய ரசிகர்கள் தயவு செய்து அவரைப் போலவே நீங்களும் தவறாக பேச வேண்டாம்.

நடக்காதது, இல்லாததை பற்றி தான் அவர் பேசிக் கொண்டிருக்கிறார். அதனால் அதற்காக நாம் ரியாக்ட் செய்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் நம்முடைய வேலையை பார்த்து போய்விட்டால் இப்படிப்பட்டவர்கள் அடுத்தவர்களைப் பற்றி பேசுவதை குறைத்து விடுவார்கள். நாம் சூரியனாக இருப்போம் எந்த நாய் வேனா குரைச்சிட்டு போகட்டும் என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cooku With Comali Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: