வைரமுத்து சொன்ன வார்த்தை; நயன்தாரா தான் என்னை படிக்க வைக்கின்றார்; டூரிஸ்ட் ஃபேமிலி சிறுவன் ஓபன் டாக்!

குழந்தை நட்சத்திரம் கமலேஷ் ஜெகன், நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் தனது பள்ளி கட்டணத்தைச் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரம் கமலேஷ் ஜெகன், நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் தனது பள்ளி கட்டணத்தைச் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
tourist family

பிரபல இந்திய குழந்தை நட்சத்திரமான கமலேஷ் ஜெகன் சமீபத்தில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். சமீபத்தில் நியூஸ் 7 தமிழ் யூடியூப் பக்கத்திற்கு அளித்த பேட்டியில், நடிகை நயன்தாரா தான் தனது பள்ளி கட்டணத்தைச் செலுத்துவதாக கமலேஷ் ஜெகன் தெரிவித்துள்ளார். 

Advertisment

சிறு வயதிலேயே தனது இசைத் திறமையை வெளிப்படுத்திய கமலேஷ், ஜீ தமிழில் ஒளிபரப்பான "சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் சீசன் 2" நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று பிரபலமானார். சமீபத்தில் வெளியான "டூரிஸ்ட் ஃபேமிலி" திரைப்படத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரனின் இளைய மகனான 'முரளி' கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார். குறிப்பாக மம்முட்டியான் பாடலுக்கு ஆடிய நடனம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. 

இதற்கு முன் ராட்சசி, பிஸ்கோத், காத்துவாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா 4 மற்றும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் அறிமுகப் படத்திலும் நடித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் நியூஸ் 7 தமிழ் யூடியூப் பக்கத்திற்கு அளித்த பேட்டியில், நடிகை நயன்தாரா தான் தனது பள்ளி கட்டணத்தைச் செலுத்துவதாக கமலேஷ் ஜெகன் தெரிவித்துள்ளார். மேலும், கவிஞர் வைரமுத்து தன்னைப் பார்த்து "கீர்த்தி சிறியது, மூர்த்தி பெரியது" என்று கூறி தமிழ்நாட்டிற்கு ஒரு பெரிய எடுத்துக்காட்டு என்று பாராட்டியதாகவும் கூறினார். இதேபோல் பலரை பார்த்துள்ளதாகவும் பாராட்டியதாகவும் கமலேஷ் ஜெகன் தெரிவித்தார். 

Advertisment
Advertisements

நயன்தாரா தனது ஹேர்ஸ்டைல் நன்றாக இருப்பதாகக் கூறியதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தான் தனது பள்ளி கட்டணத்தை இதுவரை செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார். இந்நிலையில் கமலேஷ் ஜெகன் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாடல்கள் பாடுவதில் மட்டுமின்றி தனது நடிப்பு திறமையாலும் கமலேஷ் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். 

Simran

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: