தமிழ் சினிமாவில் ஹீரோயினாக கலக்கும் குழந்தை நட்சத்திரங்கள் - படங்கள் உள்ளே!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நிவேதா, குருவி படத்தில் விஜய்க்கு தங்கையாகவும் நடித்திருக்கிறார்.

Child Artists who have grown up to be a Stars: சினிமாவைப் பொறுத்தவரை, யாருக்கு எந்த நேரத்தில் யோகம் அடிக்கும் என்றே சொல்ல முடியாது. சிலர் குழந்தை நட்சத்திரங்களாக ஜொலித்திருப்பார்கள். ஆனால் அவர்கள் வளர்ந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் போது, எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல் போகும். சிலர் குழந்தை நட்சத்திரங்களாக நடிக்கும் போது, எடுபட்டிருக்காது. ஆனால், ஹீரோ / ஹீரோயினாக கலக்கியிருப்பார்கள். அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக இருந்து ஹீரோயினாக உயர்ந்த சில நடிகைகளைப் பற்றி இங்கே பார்ப்போம்.

நித்யா மேனன்

Nithya Menon as Child Artist

இந்த அழகான நடிகை ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக இருந்தார் என்பது பலருக்கும் தெரியாது. ’த மங்கி ஹூ நியூ டூ மச்’ என்ற ஆங்கில படத்தில், நடிகை தபுவுக்கு தங்கையாக நடித்திருந்தார் நித்யா.

ஹன்ஸிகா மோத்வானி

Hansika Motwani as child artist

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஹன்ஸிகா மோத்வானி, பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஹ்ரித்திக் ரோஷனுடன், ’கோய் மில் கயா’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

மஞ்சிமா மோகன் 

manjima mohan as child artist

பிரியம், மதுரானோம்பரக்கட்டு, போன்ற மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த மஞ்சிமா மோகன், 11 வருடங்கள் கழித்து, ‘ஒரு வடக்கன் செல்ஃபி’யில் ஹீரோயினானார்.

நிவேதா தாமஸ்

Nivetha Thomas as Child Artist

‘வெறுதே ஒரு பார்யா’ என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நிவேதா, குருவி படத்தில் விஜய்க்கு தங்கையாகவும் நடித்திருக்கிறார். அதோடு ராஜ ராஜேஸ்வரி, மை டியர் பூதம் உள்ளிட்ட சீரியல்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக நடித்தவர், தற்போது தர்பார் படத்தில் ரஜினியின் மகளாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ திவ்யா

sri divya as child artist

நடிகை ஸ்ரீ திவ்யா ஹீரோயினாவதற்கு முன்பே, யுவராஜு, ஹனுமன் ஜங்க்‌ஷன் உள்ளிட்ட தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்,

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close