Pattas Single Track : ’கொடி’ படத்துக்குப் பிறகு, அப்படத்தின் இயக்குநர் துரை செந்தில் குமாருடன் மீண்டும் நடிகர் தனுஷ் இணைந்திருக்கும் திரைப்படம் ‘பட்டாஸ்’. மெஹ்ரின் பிர்ஜதா, நவீன் சந்திரா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘புதுப்பேட்டை’ படத்துக்குப் பிறகு பட்டாஸ் படத்தின் மூலம் மீண்டும் இணைகிறார் சிநேகா. தந்தை மகன் என இரு வேடங்களில் தனுஷ் நடிப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Advertisment
'3ம் பாலினத்தவர்' என்றால் அஃறிணை உயிரினங்களா?'- திருநங்கைகள் கேள்வி
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளனர். தனுஷின் பிறந்தநாளன்று ‘பட்டாஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் நேற்று இப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் பாடலை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.
Advertisment
Advertisements
‘சில் ப்ரோ’ எனத் தொடங்கும் இப்பாடலை நடிகர் தனுஷே எழுதி, பாடியுள்ளார். இப்பாடலில் பெட்ரோல் விலை, சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஆகியவற்றைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. தனுஷின் ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடலும், ‘ரவுடி பேபி’ பாடலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றன. அதே போன்று ‘சில் ப்ரோ’ பாடலையும் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் தனுஷ் ரசிகர்கள்.