தமிழ் சினிமாவில் கடந்த 1967-ம் ஆண்டு வெளியான கந்தன் கருனை என்ற பக்தி படத்தில் முருகன் வேடத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி. தொடர்ந்து தமிழ் தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த இவர், 1976-ம் ஆண்டு வெளியான மூன்று முடிச்சு படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
இன்றைய தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களான ரஜினிகாந்த் கமல்ஹாசன் இணைந்து நடித்த இந்த படத்தை இயக்குநர் இமயம் கே.பாலச்சந்தர் இயக்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து ரஜினி கமல் இருவருடனும் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த ஸ்ரீதேவி, 1986-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான நான் அடிமை இல்லை என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பல வெற்றிப்படங்களை கொடுத்த ஸ்ரீதேவி 1996-ம் ஆண்டு ஹிந்தி தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு தென்னிந்திய மொழிகளில் நடிக்காத இவர், பாலிவுட் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.
தொடர்ந்து 29 வருடங்களுக்கு பிறகு ஸ்ரீதேவி தமிழில் நடித்த படம் புலி. கடந்த 2015-ம் ஆண்டு வெளியான இந்த படத்தை இயக்குநர் சிம்புதேவன் இயக்கியிருந்தார். தளபதி விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா பிரபு ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்த இந்த படத்தில் பிரபர கன்னட நடிகர் சுதீப் வில்லனாக நடித்திருந்தார்.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான புலி திரைப்படம் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தினாலும் கலவையாக விமர்சனங்களையே பெற்றது. குழந்தைகளை மைப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் வெற்றி பெற்றிருந்தால், இதுபோன்ற சோதனைத் திரைப்படங்களைத் தொடர தமிழ் நட்சத்திரங்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் அமைத்திருக்கும. அது மட்டுமல்லாமல், இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வித்தியாசமான முயற்சிகள் கொண்ட படங்கள் கிடைத்திருப்பதோடு. நடிகை ஸ்ரீதேவி இன்னும் சில படங்கங்களில் நடித்திருக்குமு் வாய்ப்பு இருந்திருக்கும்
சுமார் மூன்று தசாப்தங்களில் ஸ்ரீதேவியின் முதல் முழு நீள தமிழ் திரைப்படம் புலி. தமிழில் பல வேடங்களில் நடித்த ஸ்ரீதேவி, 1986-ம் ஆண்டு வெளியான நான் அடிமை இல்லை படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் இருந்து விடைபெற்று பாலிவுட் பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார். ஆனாலும் புலி படத்தில் இவர் ஏற்று நடித்த கேரக்டரான யவனா ராணி (ஒரு பொல்லாத ராணி மற்றும் சூனியக்காரி) மூலம் தமிழ் ரசிர்களை கவர்ந்தார்.
மேலும் தன்னை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த இயக்குனர் சிம்பு தேவனுக்கு ஓரளவு நன்றி சொல்ல வேண்டும் என நடிகை ஸ்ரீதேவி கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் உடனான (indianexpress.com) உடனான பேட்டியில் தெரிவித்துள்ள இயக்குநர் சிம்புதேவன் ஸ்ரீதேவியுடன் பணிபுரிந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
“தமிழ் எழுத்தாளர் சாண்டில்யனின் நாவலை அடிப்படையாக வைத்து இந்தப் பாத்திரத்தை எழுதினேன். அதனால்தான் அந்த கதாபாத்திரத்திற்கு புத்தகத்தின் பெயரை வைத்தேன். நான் அந்த பாத்திரத்திற்காக நடுத்தர வயதுடைய ஒருவரைத் தேடிக்கொண்டிருந்தேன், ஆனால் ஸ்ரீதேவியை விட சிறந்த தேர்வை என்னால் கொண்டு வந்திருக்க முடியாது. முதலில் அவரிடம் கதை சொல்லிவிட்டு பிறகு முடிவு செய்யலாம் என்று யோசித்தோம்.
அப்போது ஸ்ரீதேவி இங்கிலீஷ் விங்கிலீஷ் (2012) திரைப்படத்தின் வெற்றியில் உற்சாகமாக இருந்தார். அதன்பிறகு 3 ஆண்டு இடைவெளியில் தான் புலி படம் வெளியானது, இந்த மூன்று ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்கவில்லை.
நான் மும்பையில் அவரை சந்தித்தபோது, தற்போதைய ட்ரெண்டில் அவர் எவ்வளவு மேம்படுத்தப்பட்டிருக்கிறார் என்பதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன், மேலும் அவர் ஸ்கிரிப்ட் மற்றும் அவரது பாத்திரம் தனித்துவமானது என்று நினைத்திருப்பார் என்று நம்புகிறேன். அதனால் தான் அவர் உடனடியாக படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
மிகவும் நேர்மையாக இருந்த எங்கள் சந்திப்பு எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அவரது தமிழை மீண்டும் கேட்பது மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறினார்.
அடுத்து ஸ்ரீதேவியுடன் பணிபுரிந்ததில் மறக்கமுடியாத தருணம் என்ன என்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்த சிம்பு தேவன் அவர் தனது அனுகுமுறையால் தன்னை ஆச்சரியப்படுத்தினார். “அவர் சிறந்த தொழில்முறை நெறிமுறைகளைக் கொண்ட முன்னாள் தலைமுறை நடிகர்களை சேர்ந்தவர். எப்பொழுதும் செட்டிற்கு சற்று முன்னதாகவே வந்துவிடுவார். அவரின் கேரக்டருக்காக அவர் காண்டாக்ட் லென்ஸ்கள் அணிய வேண்டியிருந்தது.
இந்த காண்டாக்ட் லென்ஸ்கள் மணிக்கணக்கில் அவரது கண்களில் இருந்ததால் ஒரு கட்டத்தில், அவருக்கு தொற்றுநோய் ஏற்பட்டது. இதற்காக இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்தார். ஆனாலும், அவருக்கு அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை, சிறிது நேரத்தில் மீண்டும் படப்பிடிப்புக்கு வந்தார்
“அவருக்கும் விஜய்க்கும் இடையே நடக்கும் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சிக்கு ஒரு டூப்பைப் பயன்படுத்தலாம் என்று நாங்கள் பரிந்துரைத்தபோது, அவர் பெரும்பாலான ஸ்டண்ட்களை தானே செய் விரும்புவதாக கூறினார். மிகவும் ஆபத்தான சில ஷாட்களுக்கு டூப் போட ஒப்புக்கொண்டார் என்று கூறியுள்ளார்.
புலி படத்திற்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தில் ராஜமாதா கேரக்டரில் நடிக்க ஸ்ரீதேவியை அனுகியதாக வெளியாக தகவல் குறித்து சிம்பு தேவனிடம் கேட்டபோது. “ஒரு நடிகர் தங்களுக்கு எது சரியானது என்று நினைக்கிறார்களோ அதை அடிப்படையாகக் கொண்டு தனது கேரக்டரை தேவு செய்வார்கள். அதுபோல் இது ஒரு தேர்வு என்று நான் நினைக்கிறேன்.
புலி படத்தில் நடித்திருந்தது அவருக்கு பிடித்திருந்தது என்று நினைக்கிறேன். இருப்பினும், அவரது முடிவு அல்லது பாகுபலி வாய்ப்பைப் பற்றி நான் தனிப்பட்ட முறையில் அவரிடம் கேட்கவில்லை என்று கூறியுள்ளார். இறுதிக் குறிப்பில், சிம்பு தேவன், ஸ்ரீதேவியின் கடைசி தமிழ்ப் படத்தை இயக்கியது எனக்கு கிடைத்த பெருமை. நான் அவரைப் பற்றி மிகவும் ரசித்த ஒரு விஷயம் என்னவென்றால், அவர் மிகவும் அடக்கமாக இருப்பவர் அவர் பிஸியாக இருக்கும் தருணத்தில் கூட தனது ரசிகர்களை மரியாதையுடன் நடத்துவார். பொறுமையான ரசிகர்களுடன் வரிசையாகப் படம் எடுப்பதை நான் பார்த்திருக்கிறேன். இன்று அவர் இல்லாதது சினிமாவுக்கு மிகப்பெரிய இழப்பு” என கூறியுள்ளார்.
சிம்பு தேவன் கடைசியாக விக்டிம் வெப் தொடரில், பாக்கு வத்தாலும் மொட்டை மாடி சித்தரும் என்ற ஒரு பகுதியை இயக்கினார். இது தற்போது SonyLIV இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“