New Update
/
பிரபல பின்னணி பாடகி சின்மயி, 96 திரைப்படத்தில் நடிகை திரிஷாவின் உதட்டசைவுக்கு ஏற்ப பாடல் பாடியது சவாலாக இருந்தது என்று ஒரு சுவாரசியமான அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
சினிமாவில் பொதுவாக இசையமைப்பாளர் இசையமைத்த் பாடல் பதிவில் பின்னணி பாடகிகள் பாடிய பாடலுக்கு ஏற்றவாறு, படப்பிடிப்பில் நடிகர்கள், நடிகைகள் உதட்டசைத்து நடிப்பார்கள். ஆனால், வழக்கத்திற்கு மாறாக, மிகவும் அரிதாக, பாடல் பதிவுக்கு முன்னரே, ஒரு பாடலைப் பாடுவது போல, படமாக்கிவிட்டால், அந்த நடிகர்கள், நடிகைகள் பாடுவது போன்ற உதட்டசைவுக்கு பாடகர்களை பாட வைப்பது என்பது சவாலானது. அப்படி ஒரு சவாலான அனுபவத்தை பின்னணி பாடகி சின்மயி பகிர்ந்துகொண்டுள்ளார்.
பிரபல பின்னணி பாடகி சின்மயி, த்ரிஷா பாடுவது போல் ஏற்கனவே நடித்து முடித்துவிட்ட காட்சியில் அவரது உதட்டசைவுக்கு ஏற்ப பாடினார் என்றும் அது தனக்கு சவாலாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவான ‘96’ திரைப்படம் 2018-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. 96 படம் பலரின் மலரும் நினைவுகளை காதல் அனுபவத்தை கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்தியது.
96 திரைப்படம் சமீபத்தில் மீண்டும் திரையரங்குகளில் திரையிடப்பட்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், பிரபல பின்னணி பாடகி சின்மயி, 96 படத்தின் பாடல் ஒலிப்பதிவின் போது நடந்த ஒரு சுவாரசியமான அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
Since ‘96 has re-released, one small thingibob I may not have shared about this scene where I sing the charanam of Thenral Vandhu.
— Chinmayi Sripaada (@Chinmayi) February 18, 2024
I didn’t record it first for Trisha to lip sync during shoot, as is the norm with song shoots.
I sang over Trisha’s performance, matching to lip…
இந்த படத்தில் ‘தென்றல் வந்து தீண்டும்போது’ என்ற பாடலை நீண்ட நாள் கழித்து பார்க்கும் தனது நண்பர்கள் மத்தியில் த்ரிஷா பாடும் காட்சி இடம் பெற்றுள்ளது என்பது தெரிந்தது. இந்த காட்சி ஏற்கனவே படமாக்கப்பட்ட நிலையில் அதன் பின்னர் தான் சின்மயி, த்ரிஷாவின் உதட்டசைவுக்கு ஏற்ப தான் பாடியதாகவும் த்ரிஷாவின் உதட்டசைவிற்கு ஏற்ற வகையில் பாடியது தனக்கு கொஞ்சம் சவாலாக இருந்தது என்றும் தெரிவித்து இருந்தார்.
குறிப்பாக குளோசப் காட்சிகளில் த்ரிஷாவின் உதட்டசைவுக்கு ஏற்ப பொருத்தமாக பாடியிருந்தேன் என்றும் இந்த வீடியோவை பார்க்கும் போதே உங்களுக்கு அது புரியும் என்றும் த்ரிஷா நடித்த அந்த காட்சியின் வீடியோவையும் சின்மயி பகிர்ந்துள்ளார்.
பாடகி சின்மயி பகிர்ந்த இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் ‘ஆமாம் உண்மையிலேயே நீங்கள் த்ரிஷாவின் உதட்டசைவுக்கு ஏற்ப மிகவும் பொருத்தமாக பாடி இருக்கிறீர்கள்’ என்று பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.