நீங்கள் புடவை கட்டினால் நன்றாக இருக்கும்.. ட்விட்டரில் சின்மயிடம் வாங்கி கட்டிக் கொண்ட ரசிகர்!

வட்டமிட்டு ஆபாச இணையதளங்களில் போட்டுவிடுகின்றனர்.

சின்மயி ரசிகர்
சின்மயி ரசிகர்

பாடகி சின்மயி-ன் ரசிகர் ஒருவர், ட்விட்டரில் அவரை புடவைக் கட்ட சொல்ல, அதற்கு சின்மயி கொடுத்த பதில் சமூகவலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒருகாலத்தில் எப்படி இருந்தாங்க.. இப்ப இப்படி ஆயிட்டாங்களே-ன்னு மீம்ஸ் போடும் அளவிற்கு பாடகி சின்மயி வாழ்க்கையில் குறுகிய காலத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. இதற்கு பிள்ளையார் சுழியே மீடு விவகாரம் தான்.

கவிஞர் வைரமுத்து மீது சின்மயி முன்வைத்த குற்றச்சாட்டு தமிழ் சினிமாவில் மட்டுமில்லை தமிழ்நாட்டிலே பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது எனலாம்.  சின்மயி முன்வைத்த குற்ற்ச்சாட்டு உண்மை என்று சிலர் அவருக்கு கைக்கொடுக்க, வேறு சிலர் இது அரசியல் சாயம், சித்தரிக்கப்பட்ட குற்றச்சாட்டு என அவர்கள் தரப்பு விவாதங்களை முவைத்தனர்.

ஆனால் இந்த அனைத்திற்கும் இடைவிடாமல் ட்விட்டர், வீடியோ, செய்தியாளர்கள் சந்திப்பு, விவாத நிகழ்ச்சிகள் மூலம் சின்மயி பதில் கூறி வருகிறார். அதிலும் ட்விட்டரில் அவரைக் குறித்து ரசிகர்கள், நெட்டிசன்கள், பொதுமக்கள் என யார் எந்த விமர்சனத்தை முன்வைத்தாலும், அல்லது கேள்வி கேட்டாலும் அதற்கு சின்மயி தகுந்த பதில் அளிக்காமல் விடுவதில்லை. அப்படித்தான் நேற்றைய தினம் ரசிகர் ஒருவர் சின்மயிக்கு போட்ட ட்வீட் அதற்கு அவர் கொடுத்த பதில் இப்போது விவாதத்தை கிளப்பியுள்ளது.

சின்மயிக்கு ரசிகர் செய்த ட்வீட் “ நீங்கள் அருமையாக பாடும் ஒரு திறமைசாலி ஆனால்,நீங்கள் கலாச்சாரத்தை மதிக்கும் வகையில் புடவை அணிந்தால் நன்றாக இருக்கும் என்று சின்மையிடம் தெரிவித்திருந்தார்.

இதற்கு சின்மயி அளித்த பதில், “ அப்படி நான் சேலை கட்டி வந்தாலும் சில வக்கிர புக்தி கொண்ட ஆண்கள் கூட்டம் என் இடுப்பு மற்றும் மார்பு தெரியும்படி போட்டோ எடுத்து அதை வட்டமிட்டு ஆபாச இணையதளங்களில் போட்டுவிடுகின்றனர்.

அதைப் பார்த்த பின்பு சிலர் தவறான நோக்கத்துடன் என்னை அணுகின்றனர். வேண்டுமென்றால் ஸ்கீரின் ஷாட் பார்கிறீர்களா? நான் புடவை அணிந்தாலும் ஜீன்ஸ் அணிந்தாலும் இந்தியன் தான் சார் என்று கூறியுள்ளார் .

சின்மயின் இந்த பதிலை பலரும் வரவேற்றுள்ளனர். அதே சமயம் வழக்கம் போல் சில விவாதங்களும் ட்விட்டரில் சென்றுக் கொண்டிருக்கின்றன.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chinmayi sripaada gives it back to a fan who asks her to wear a saree while performing

Next Story
கண்கலங்க வைக்கும் காட்சி… கொல்லப்பட்ட ரசிகர் பெற்றோரை சந்தித்த சிம்புsimbu, நடிகர் சிம்பு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com