பாடகி சின்மயி, தோடி வர்ணம் ராகத்தில், பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்ட அவரது கணவர் ராகுல் ரவீந்திரனுக்கு நெட்டிசன்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
Advertisment
தமிழ் மட்டுமல்லாது இந்திய திரையுலகின் முன்னணி பாடகியாக இருப்பவர் சின்மயி, பல தேசிய விருதுகளை பெற்ற இவரது குரலுக்கு மயங்காதவர்களை நாம் விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவிற்கு ரம்மியமான குரல் சின்மயிக்கு உண்டு.
சமீபத்தில் மீடு புகார் காரணமாக ஊடகங்களில் இவரது பெயர் தொடர்ந்து அடிபட்டு வந்தது நினைவிருக்கலாம்.
Advertisment
Advertisement
கொரோனா ஊரடங்கால் உலகமே முடங்கியுள்ளது. இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்யும் வகையில், தனது பாடல்களை பாடி அதை வீடியோவாக வெளியிட்டு அதன்மூலம் கிடைக்கும் நிதியுதவியை, பாதிக்கப்படும் மக்களுக்கு வழங்கிவரும் அரும்பணியை சின்மயி மேற்கொண்டுள்ளார். இதுமட்டுமல்லாது, தனது யூடியூப் சேனலில், சரும பராமரிப்பு, பெண்ணியம் குறித்த தனது கருத்துகளுக்கு பெரும்ரசிகர் பட்டாளத்தையே அவர் உருவாக்கி வைத்துள்ளார். சின்மயி, இந்த ஊரடங்கு காலத்தில் தனது இசைப்பயணம் குறித்து வெப்மினார்களில் தொடர்ந்து பங்கேற்று வருவது மட்டுமல்லாது, விர்சுவல் இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
Spreading the joy I get at home... 3 minutes of pure magic. @Chinmayi’s Practise session of Thodi Varnam. It’s amazing what the human voice can do. https://t.co/lCWJ4HDD4o
இந்நிலையில், சின்மயி, தோடி வர்ணம் ராகத்தில் கர்நாடக இசைப்பாடலை பயிற்சி செய்யும் வீடியோவை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த நிலையில், அவரது கணவர் ராகுல் ரவீந்திரன், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, சின்மயியின் இந்த பயிற்சியின் மூலம், வீட்டில் அளவில்லா மகிழ்ச்சி நிறைந்திருந்தது. அந்த 3 நிமிடம் ஒரு இனிய உன்னத அனுபவமாக இருந்தது. அவரது குரல், கேட்பவர்களை மெய் மறக்கச்செய்யும் வகையில் உள்ளதாக ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
சின்மயியின் குரலை வீட்டில் தினமும் கேட்க முடிந்த நீங்கள் (ராகுல் ரவீந்திரன்) அதிர்ஷ்டசாலி என்று தெரிவித்துள்ள சின்மயி ரசிகர்கள், இந்த வீடியோவை பதிவிட்டதற்காக தங்களது நன்றியையும் தெரிவித்துள்ளனர். இதற்கு சின்மயி தரப்பிலிருந்து பதிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil