/indian-express-tamil/media/media_files/2025/09/09/screenshot-2025-09-09-175753-2025-09-09-17-58-14.jpg)
’சின்ன மருமகள்’ சீரியலில் முன்னணி கதாநாயகியாக நடிக்கும் ஸ்வேதா தன் திரை வாழ்க்கை மற்றும் காதலன் குறித்து மனம் திறந்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ‘சின்ன மருமகள்’ என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்வேதா. தமிழ் செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் இவர் பட்டம் பெறுவதற்காக பல்வேறு போராட்டங்களை சந்தித்து வருகிறார். ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் போன்று இந்த சீரியலும் தினமும் பலப்பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.
சமீபத்தில் நடிகை ஸ்வேதா தனது காதலருடன் இருக்கும் புகைப்படம் வெளியானது. தனக்கு காதலன் இருக்கிறார் என்று சொன்ன ஸ்வேதா எந்த நேர்காணலிலும் அவரது புகைப்படத்தை பகிர்ந்தது இல்லை. இந்நிலையில், ஸ்வேதா தனது காதலருடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலானது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஸ்வேதா அந்நபர் தனது காதலன் இல்லை என்றும் அவரை போலீஸ் தேடிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
இப்படி சீரியலிலும் தனது வாழ்க்கையிலும் பல திருப்பங்களை சந்தித்து வரும் நடிகை ஸ்வேதா, சின்னத்திரை வாழ்க்கை குறித்து பிகைண்ட்வுட்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார். அவர் பேசியதாவது, “எங்க இயக்குநர் எல்லா விஷயங்களிலும் கரெட்டாக இருப்பார். அழும் சீனிற்குலாம் மேக்கப் போட விடமாட்டார்.
‘சின்ன மருமகள்’ படப்பிடிப்பு தளம் ஒரு நான்கு மாதங்களில் பழகிவிட்டது. மலர் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைக்கும் எனக்கும் முதலில் செட்டாகவில்லை. தற்போது தான் இரண்டு பேரும் நன்றாக பேசுகிறோம். ‘கோலிசோடா’ வெப் தொடர் நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது நடித்தது. அது இப்போது தான் ரிலீஸாகி இருக்கிறது.
என் அம்மா எனக்கு மிகவும் உதவியாக இருந்தார். சீரியலில் ரொமான்ஸ் சீன் வந்தா என் அம்மா எனக்கு வீடியோ அனுப்பி என்ன செய்திருக்க பாரு என்பார். பொதுவாக என் அம்மா குடும்பத்தில் என்னை பற்றி யார் என்ன சொன்னாலும் கேட்கமாட்டார். என்னிடம் மிகவும் சகஜமாக இருப்பார்.
முதலில் என் காதலன் தான் எனக்கு மிகவும் பக்கபலமாக இருந்தார். எங்கு எப்படி இருக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதெல்லாம் அவர்தான் கற்றுக் கொடுத்தார். ரொமான்ஸ் சீன் எல்லாம் வந்தால் அவர் சீரியலை பார்க்கமாட்டார். சரியான நேரத்தில் அவரை நான் உலகிற்கு அறிமுகப்படுத்துவேன். என் தொழிலை மிகவும் மதிக்கிறார் அது எனக்கு போதும். அவர் எனக்கு மிகவும் உண்மையாக இருக்கிறார்.
என் உடன் நடிக்கும் நவீன், கேமரா ஆன் என்றால் சார் என்ன சொல்கிறாரோ அதை செய்வார். ஆஃப் என்றால் நான் எங்கயோ இருப்பேன் அவர் எங்கயோ இருப்பார். முதலில் நான் கமெண்ட்ஸ்லாம் பார்த்து அழுது கொண்டிருப்பேன். இப்போது அதை எல்லாம் கண்டு கொள்வதில்லை. எங்க சீரியல் மதுரையில் இருப்பது போன்ற கதை அதனால் நடிகை ரேவதியோட படங்களை பாருங்கள் என்று பலர் கூறினார்கள்” என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.