’சின்னத்தம்பி’ ஹீரோயினுக்கு மறுமணம்: பொழியும் வாழ்த்து மழை!

Chinnathambi serial: இரண்டரை ஆண்டுகள் கழிந்த நிலையில், இவர் தன் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை தொடங்க இருக்கிறார்.

By: Updated: July 26, 2019, 12:29:40 PM

Pavani Reddy’s 2nd Marriage: விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் ’சின்னத் தம்பி’ சீரியலைப் பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. முன்னாள் தொலைக்காட்சி தொகுப்பாளர் பிரஜின் ஹீரோவாக நடிக்கும் இத்தொடரில், அவருக்கு ஜோடியாக நடிப்பவர் பவானி ரெட்டி.

chinnathambi actress pavani reddy 2nd marriage பவானி ரெட்டியின் முதல் திருமணம்

அந்த சீரியலில் வரும் கதாப்பாத்திரத்திற்கு எதிர்மறையானது பவானியின் வாழ்க்கை. தன்னுடன் சீரியலில் நடித்த நடிகர் பிரதீப் என்பவரை காதலித்து கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். பின்னர் சின்னதாக இருந்த தவறான புரிதலால், 2017-ம் ஆண்டு தற்கொலை செய்துக் கொண்டார் பிரதீப். காதல் கணவர் இப்படி செய்ததை தாங்கிக் கொள்ள முடியாத பவானி, தன்னை பிஸியாக வைத்துக் கொள்ள எண்ணினார். சில நாட்களில் ‘சின்னத்தம்பி’ சீரியலில் ஹீரோயினாக ஒப்பந்தமானார்.

chinnathambi actress pavani reddy 2nd marriage முதல் கணவர் பிரதீப்புடன்

இதைசீரியல் தொடங்கும் போதே பல பேட்டிகளில் கூறினார் பவானி. இரண்டரை ஆண்டுகள் கழிந்த நிலையில், இவர் தன் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை தொடங்க இருக்கிறார். அவரது குடும்ப நண்பர் ஆனந்த் என்பவரை விரைவில் மணக்கவிருக்கிறார் பவானி.

chinnathambi actress pavani reddy 2nd marriage வருங்கால கணவர் ஆனந்த்

கணவராக போகும் ஆனந்த், தன்னுடைய உணர்வுகளை புரிந்துகொண்டு அவற்றிற்கு மதிப்பு கொடுக்கிறார் என்று குறிப்பிட்ட பவானி, இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றும், தேதியும் இடமும் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதனால் பவானிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Chinnathambi serial pavani reddy 2nd marriage

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X