சிவாஜி கணேசன் புறக்கணிப்பு: கொண்டாடப்பட்ட இந்தி ஸ்டார்கள்: தேசிய விருது விழாவில் அவமானப்பட்டதாக சிரஞ்சீவி வேதனை!

கடந்த 1989-ல் தேசிய திரைப்பட விருது விழாவில் கலந்து கொண்டபோது, தனக்கு "அவமானம்" மற்றும் "மன உளைச்சல்" ஏற்பட்டதாக நடிகர் சிரஞ்சீவி தெரிவித்தார்.

கடந்த 1989-ல் தேசிய திரைப்பட விருது விழாவில் கலந்து கொண்டபோது, தனக்கு "அவமானம்" மற்றும் "மன உளைச்சல்" ஏற்பட்டதாக நடிகர் சிரஞ்சீவி தெரிவித்தார்.

author-image
WebDesk
New Update
Chiranjeevi New

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக இந்தியத் திரைப்படங்களில் முக்கியப் பங்காற்றி வரும் தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி,  கடந்த 1989-ல் தேசிய திரைப்பட விருது விழாவில் கலந்து கொண்டபோது, தனக்கு அவமானம் மற்றும் மன உளைச்சல் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.  

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Chiranjeevi was ‘humiliated’ when stars like Sivaji Ganesan were ignored at National Awards while Raj Kapoor, Dilip Kumar were celebrated: ‘It was like an insult’

தனது "ருத்ரவீணை" திரைப்படம் தேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த திரைப்படமாக நர்கிஸ் தத் விருதைப் பெற்றபோது, டெல்லியில் உள்ள அரசு அதிகாரிகள் "இந்தித் திரைப்படங்களையே இந்தியத் திரைப்படங்களாகக் கருதுகின்றனர்" என்பதை உணர்ந்த சிரஞ்சீவி, இது மற்ற திரையுலகங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று கூறினார்.

2022-ல் "ஆச்சார்யா" திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வில், பேசிய சிரஞ்சீவி, 1989-ல் தேசிய விருது விழாவுக்கு முன்பு அரசு நடத்திய தேநீர் விருந்தில் கலந்து கொண்டதை சிரஞ்சீவி நினைவு கூர்ந்தார். அதில், பிரித்விராஜ் கபூர், ராஜ் கபூர், அமிதாப் பச்சன் போன்ற திரையுலக ஜாம்பவான்களின் புகைப்படங்கள் இருந்த சுவரைப் பார்த்தபோது, சிவாஜி கணேசன், ராஜ்குமார் போன்ற தென்னிந்திய ஜாம்பவான்கள் புறக்கணிக்கப்பட்டதை அவர் கண்டார்.

Advertisment
Advertisements

தென்னிந்திய திரைப்படங்களைப் பற்றி ஏதாவது இருக்குமா என்று எதிர்பார்த்து நடந்து சென்றேன். ஆனால், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படம், பிரேம் நசீர் புகைப்படம் மட்டுமே இருந்தன. அவர்கள் அதை 'தென்னிந்திய திரைப்படங்கள்' என்று குறிப்பிட்டனர். அதே சமயம், ராஜ்குமார், விஷ்ணுவர்தன், என்.டி.ராமராவ், நாகேஸ்வர ராவ், சிவாஜி கணேசன் போன்ற ஜாம்பவான்களையோ, எங்கள் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குநர்களையோ அவர்கள் அங்கீகரிக்கவில்லை. அந்த நேரத்தில் நான் மிகவும் அவமானப்பட்டேன். அது ஒரு அவமானம் போல் இருந்தது.

அவர்கள் இந்தித் திரைப்படங்களையே இந்தியத் திரைப்படங்களாகச் சித்தரித்தனர். மற்ற திரைப்படங்கள் 'பிராந்திய திரைப்படங்கள்' என்று வகைப்படுத்தப்பட்டு, மரியாதை கொடுக்கப்படவில்லை," என்று சிரஞ்சீவி, நினைவு கூர்ந்தார்.

தொடர்ந்து 2024-ல் ஆஹா தளத்தில் ராஜீவ் மசந்த் உடனான சிறப்பு உரையாடலில் பேசிய அவர், திலீப் குமார் போன்ற நடிகர்களின் புகைப்படங்கள் சுவர்களில் தொங்கவிடப்பட்டதாகவும், ஆனால் தென்னிந்தியாவின் பல நட்சத்திரங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். "தெற்கிலிருந்து, புகழ்பெற்ற கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் மற்றும் தமிழ் ஜாம்பவான் எம்.ஜி.ஆர் புகைப்படங்கள் இருந்தன. எங்கள் என்.டி.ராமராவ், அக்கினேனி நாகேஸ்வர ராவ், சிவாஜி கணேசன் ஆகியோரின் புகைப்படங்கள் இல்லை என்று நான் வருத்தப்பட்டேன் என்று அவர் கூறினார்.

இந்தியத் திரையுலகம் முழுவதும் இந்தித் திரைப்படங்களே பிரதிநிதித்துவப்படுத்துவது நியாயமற்றது என்று உணர்ந்த, சிரஞ்சீவி, எஸ்.எஸ்.ராஜமௌலியின் "பாகுபலி" திரைப்படத்திற்குப் பிறகு, நிலைமை மாறத் தொடங்கியது என்றும், மற்ற திரையுலகங்களின் திரைப்படங்கள் பிராந்திய எல்லைகளுக்குள் கட்டுப்படுத்தப்படவில்லை என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளில், இந்தி மற்றும் தென்னிந்திய திரைப்படங்கள் பற்றிய உரையாடல் தீவிரமடைந்துள்ளது. 2024-ல், "புஷ்பா 2" திரைப்படம் தெலுங்கு பதிப்பை விட இந்தி பதிப்பில் அதிக வருமானம் ஈட்டியது. மேலும், "ஸ்ட்ரீ 2" மற்றும் "போல் புலையா 3" போன்ற திரைப்படங்களை விட இதுவே ஆண்டின் மிகப்பெரிய இந்தி வசூல் படமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Chiranjeevi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: