Advertisment

திரிஷா மீதான மன்சூர் அலி கான் பேச்சு: நடிகர் சீரஞ்சிவி கண்டனம்

நடிகர் மன்சூர் அலிகான், “லியோ படத்தில் பெட்ரூம் காட்சி மிஸ் ஆகிவிட்டது. குஷ்பு, ரோஜாவை மெத்தையில் போட்டதுபோல் திரிஷாவை போட முடியவில்லை” என பொருள்படும்படி பேசியிருந்தார்.

author-image
WebDesk
New Update
Mansoor Ali Khan comments on Trisha

மன்சூர் அலிகானின் கருத்துகள் அருவருப்பாக உள்ளன; அவர் கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கப்பட வேண்டும் என நடிகர் சிரஞ்சீவி கூறியுள்ளார்.

நடிகர் மன்சூர் அலிகான், “லியோ படத்தில் பெட்ரூம் காட்சி மிஸ் ஆகிவிட்டது. குஷ்பு, ரோஜாவை மெத்தையில் போட்டதுபோல் திரிஷாவை போட முடியவில்லை” என பொருள்படும்படி பேசியிருந்தார்.

இந்தப் பேச்சு தொடர்பாக சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் தேசிய மகளிர் ஆணையம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

Advertisment

இந்தப் புகாரின் அடிப்படையில் அவர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் கடுமையான வார்த்தைகளால் கண்டிக்கப்பட வேண்டும் என தெலுங்கு சூப்பர் ஸ்டார் சீரஞ்சிவி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளத்தில், “திரிஷா பற்றி நடிகர் மன்சூர் அலிகான் கூறிய சில கண்டிக்கத்தக்க கருத்துக்கள் என் கவனத்துக்கு வந்தன.

இந்தக் கருத்துக்கள் ஒரு கலைஞருக்கு மட்டுமல்ல, எந்த ஒரு பெண்ணுக்கும் அருவருப்பானதாக உள்ளது.

இந்தக் கருத்துக்கள் கடுமையான வார்த்தைகளில் கண்டிக்கப்பட வேண்டும். இதுபோன்ற கொடூரமான கருத்துக்களுக்கு உள்ளான பெண்களுக்கு நான் உடன் நிற்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மன்சூர் அலிகானின் கருத்துக்கு பதிலளித்த திரிஷா, “என் தொடர்பாக மன்சூர் அலிகான்  பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் என் கவனத்துக்கு வந்தது. இதில், பாலியல், பெண் வெறுப்பு, மோசமான ரசனையை நான் காண்கிறேன். அவருடன் இனி ஒரு காலமும் படம் நடிக்க மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆங்கிலத்தில் வாசிக்க : Chiranjeevi lashes out at Mansoor Ali Khan for ‘distasteful and disgusting’ comments on Trisha

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Trisha Mansoor Ali Khan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment