scorecardresearch

சுவிட்சர்லாந்தில் போலா ஷங்கர் பட ஷூட்டிங்; புகைப்படங்களை லீக் செய்த சிரஞ்சீவி

சிரஞ்சீவி தற்போது சுவிட்சர்லாந்தில் போலா ஷங்கர் படத்தில் தமன்னாவுடன் காதல் பாடலுக்கான படப்பிடிப்பில் இருக்கிறார்.

chiranjeevi, bholaa shankar, chiranjeevi upcoming film, சுவிட்சர்லாந்தில் போலா ஷங்கர் பட ஷூட்டிங்கில் சிரஞ்சீவி, புகைப்படங்களை லீக் செய்த சிரஞ்சீவி, bhola shankar, bholaa shankar photos, Tamannaah Bhatia, Tamannaah
சுவிட்சர்லாந்தில் போலா ஷங்கர் பட ஷூட்டிங்கில் சிரஞ்சீவி

கவர்ச்சியான இடங்களில் காதல் பாடல் காட்சிகளை படமாக்கும் நிகவுகள் மெல்ல ஒரு கடந்த கால விஷயமாக மாறி வருகிறது. இருப்பினும், மெகா ஸ்டார் சிரஞ்சீவி இப்போதும் அதை நம்புவதாகத் தெரிகிறது. அதனால்தான், அவர் மீண்டும் சுவிட்சர்லாந்தில் தமன்னா பாட்டியாவுடன் போலா ஷங்கர் படத்திற்காக ஒரு பாடலைப் படமாக்குகிறார். முன்னதாக, அவர் தனது முந்தைய படமான ‘வால்டேர் வீரய்யா’ படத்திற்காக ஸ்ருதி ஹாசனுடன் ஐரோப்பாவில் ‘ஸ்ரீதேவி சிரஞ்சீவி’ பாடலை படமாக்கினார்.

சிரஞ்சீவி ட்விட்டரில் போலா ஷங்கர் பட ஷூட்டிங் செட்களில் இருந்து சில படங்களைப் பகிர்ந்துள்ளார். “போலா ஷங்கர் படத்துக்காக தமன்னாவுடன் சுவிட்சர்லாந்தின் அழகான இடங்களில் பாடல் படப்பிடிப்பு மிகவும் வேடிக்கையாக இருந்தது. இந்த பாடல் பார்வையாளர்களையும் மேலும் அனைத்து ரசிகர்களையும் மகிழ்விக்கும் என்று என்னால் சொல்ல முடியும். விவரங்களை விரைவில் பகிர்ந்து கொள்வோம். அதுவரை உங்களுக்காக இந்த ‘சிரிய லீக்ஸ்’ படங்கள்.” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ஸ்ருதிஹாசன் இதுபோன்ற உறைபனியில் படப்பிடிப்பு நடந்தது பற்றி பேசியிருந்தார். உடல் ரீதியாக மிகவும் சங்கடமாக இருப்பதால், புடவை அணிந்து பனியில் இன்னொரு பாடலில் நான் நடிக்க வேண்டியதில்லை என்று நம்புகிறேன். ஆனால், மக்கள் இன்னும் அதைப் பார்க்க விரும்புகிறார்கள். நாங்கள் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், இது ஒரு பெண்ணுக்கு உண்மையிலேயே சங்கடமாக இருக்கிறது” என்று அவர் கூறினார்.

இருப்பினும், இந்த போக்கு சிறிது காலத்திற்கு தொடரும் என்று தெரிகிறது. இந்த முறை தமன்னா பாட்டியா பொருத்தமற்ற உடையில் உறைபனியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

மெஹர் ரமேஷ் இயக்கும் போலா ஷங்கர் படத்தில் கீர்த்தி சுரேஷ், ராது பாபு, முரளி சர்மா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் சிவா இயக்கத்தில் அஜித்தின் தமிழில் ஹிட்டான வேதாளம் படத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Chiranjeevi leaks photos from sets of bholaa shankar in switzerland for fans

Best of Express