Advertisment

மஞ்ஜூமெல் பாய்ஸ் படத்திற்கு பாராட்டு... இயக்குனரை சந்தித்த சித்தா படக்குழு : வைரல் போட்டோ

மஞ்ஜூமெல் பாய்ஸ் படத்திற்கு, கமல்ஹாசன், பா.ரஞ்சித், ஜீத்து ஜோசப், அனுராக் காஷ்யப், வெங்கட் பிரபு, உதயநிதி ஸ்டாலின், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்

author-image
WebDesk
New Update
Manjummel Boys

மஞ்ஜூமேல் பாய்ஸ் பட இயக்குனருடன் சித்தார்த்

திரையரங்குகளில் வெளியாகி 25 நாட்களை கடந்த பின்னும் பாக்ஸ் ஆபீஸில் வசூல் சாதனை படைத்து வரும் மஞ்ஜூமல் பாய்ஸ் திரைப்படம் ரசிகர்களின் இதயத்தை வென்றுள்ள நிலையில், திரைத்துறையை சேர்ந்த பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

மலையாள இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 22-ந் தேதி வெளியான படம் மஞ்ஜூமேல் பாய்ஸ். கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கொடைக்கானலில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த சர்வைவல் த்ரில்லர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

குறிப்பாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த படத்திற்கு, கமல்ஹாசன், பா.ரஞ்சித், ஜீத்து ஜோசப், அனுராக் காஷ்யப், வெங்கட் பிரபு, உதயநிதி ஸ்டாலின், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் பாராட்டு தெரிவித்த நிலையில், தற்போது சித்தா படத்தின் நாயகன் நடிகர் சித்தார்த் மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் மஞ்ஜூமல் பாய்ஸ் படக்குழுவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து படக்குழுவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள நடிகர் சித்தார்த், எங்கள் குழுவினர் மஞ்சும்மேல் பாய்ஸ் இயக்குனர் திரு சிதம்பரத்தை சந்தித்தனர். அவர் எங்களை நன்றாக ஊக்கப்படுத்தினார் என்று பதிவிட்டுள்ளார். உலகளவில் ரூ.180 கோடிக்கு மேல் வசூல் செய்து, மஞ்ஜூமல் பாய்ஸ் தற்போது மலையாளத்தில் அதிக வசூல் செய்த படம். ஜூட் அந்தனி ஜோசப்பின் 2018 திரைப்படத்தின் வசூல் சாதனையை இந்தப் சமீபத்தில் முறியடித்தது.

2018 திரைப்படம் கடந்த ஆண்டு ரூ. 175 கோடியைப் பதிவுசெய்து, இயக்குனர் வைசாக்கின் மோகன்லால் நடித்த புலிமுருகன் படத்தை வீழ்த்தி மலையாளத்தில் அதிக வசூல் செய்த திரைப்படமாக மாறியது. இதனிடையே தற்போது மஞ்ஜூமல் பாய்ஸ் திரைப்படம் 20 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.180 கோடியைத் தாண்டியதால், மற்றொரு மைல்கல்லைப் பதித்து, உலகளவில் ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாளத் திரைப்படமாக மாறும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

பிப்ரவரி 22 அன்று வெளியான மஞ்ஜூமல் பாய்ஸ் திரைப்படம், கமல்ஹாசன், 1991 ஆம் ஆண்டு வெளிவந்த குணா படத்திற்காக தனது மரியாதை செலுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து படத்தின் இயக்குனர் , படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினரை சென்னையில் நடிகர் கமல்ஹாசனை சந்தித்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment