/tamil-ie/media/media_files/uploads/2019/10/Chithi-2.jpg)
22 Years of Chithi Serial : தனியார் தொலைக்காட்சிகளில் இன்று ஏராளமான மெகா தொடர்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் மக்களை சின்னத்திரை ரசிகர்களாக்கியதற்கான பெரும்பங்கு, ‘சித்தி’ சீரியலையே சாறும்.
”கண்ணின் மணி.. கண்ணின் மணி” என்ற அதன் பாட்டு ஒளிபரப்பானதும், எந்த வேலை செய்துக் கொண்டிருந்தாலும், அத்தனையையும் விட்டு விட்டு டிவி முன்னாடி ஆஜராகி விடுவார்கள். இந்நிலையில், சித்தி தொடர் ஒளிபரப்பைத் தொடங்கி 22 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. ஆம் அந்தத் தொடரின் முதல் எபிசோட் 1999ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி ஒளிபரப்பானதாக, சித்தியின் ஹீரோயினும், அதன் தயாரிப்பாளருமான ராதிகா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
22 years ago we launched #Chithi .
Today #SunTV and #Radaan are proud to launch #chithi2. Another Chithi’s life from January. Directed by SundarK Vijayan
— Radikaa Sarathkumar (@realradikaa) December 20, 2019
1999-ம் ஆண்டு தொடங்கி 2001-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி வரை ரசிகர்களின் பேரதரவுடன் ஒளிபரப்பானது சித்தி. தமிழ் டிவி உலகின் மறக்க முடியாத நெடுந்தொடர்களில் இத்தொடருக்கு மிக முக்கிய இடம் உண்டு. ராதிகா, சிவக்குமார் ஆகியோரின் நேர்த்தியான நடிப்பு, பாடல், கதையம்சம், கேரக்டர்கள், ஒளிப்பதிவு என பல கோணங்களில் இந்தத் தொடர் இன்று வரை பெஸ்ட்டான தொடராக உள்ளது.
இந்நிலையில் சித்தியின் இன்னொரு வாழ்க்கையை ஜனவரியில் இருந்து பாருங்கள் என்றும், இதனை சுந்தர் கே விஜயன் இயக்குகிறார் என்றும் ராதிகா தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.